காதலோடு நான்
பல ஆண்டுகளுக்கு பின் அவனை நான் பாத்தேன்
என்ன பார்க்கத்தான் எங்கிருந்தோ வந்தான்..
பல ஆண்டுகள் பரிட்சயமான அவனை அன்று கண்டபொழுது
அதிசயத்தை பாத்தது போல் என்னை மறந்து நின்றேன்.
மறுநொடி விழித்து கொண்டு நலம் விசாரித்தேன்
நலம் என்றான் நானும் நலம் என்றேன்...
அவனுக்கு ஒரு பரிசுப்பொருள் வாங்கியிருந்தேன்
அதை அவனிடம் கொடுத்தேன்,
எனக்கு என்ன வாங்கி வந்தாய் என்ற வினாவுடன்.
வழக்கம் போல் மௌனம் தான் பதில் அந்த சிறு புன்னகையுடன்...
ஆனால் கலங்கிய அவன் கண்களை நானோ கண்டும் காணமல் நின்றேன்
நான் ஏன் என்று கேட்க என் முன் அவன் கண்ணீர் சிந்தி விடுவானோ என்ற பயம்..
நான் தினமும் செல்லும் கோவில்
நான் செல்லும் வழி
நான் பொருள்கள் வாங்கும் கடை
என அனைத்தையும் அவனுக்கு அறிமுகம் செய்தேன்...
கடைசியில் அங்கு பக்கம் இருந்த ஒரு கடைக்கு சென்றோம்
அவன் என் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்
சொல்லு சொல்லு என்று அவன் நண்பன் சொன்ன போது
இவன் சொல்லாத வார்த்தைகள் எனக்கு புரிந்தது..
அவன் பெயர் எழுத முற்படும் பொழுது
நடுங்கிய என் கை விரல்கள்..
அதன் அர்த்தம் அவன் மட்டும் அறிவான்..
பிரிந்து செல்ல நினைக்கும் போது தான்
இருவரும் இரண்டு நிமிடம் நடந்தோம் ..
லேசான தூரல் அழகான காற்று..
அவன் சென்று விட்டான்...