ஸீதா கல்யாண வைபோகமே

ராமாயணம்...
வால்மீகி எழுதப்போக
கம்பன் எழுதினான்...
கோன புதாவும்,மாதவ கந்தளியும்
அவர்கட்குப்பின்
துளசிதாசரும், ஓஜாவும்
தொடர்ந்து வந்த
நரஹரியும்,எழுத்தச்சனும்
காலப்போக்கில்
சந்தஜாவும், குவெம்புவும் எழுத
பின் வாலி...
பொறுக்கமுடியாமல் நானும்
நான் எழுதக்கண்டு
கந்தசாமியும் பத்ரியும்
எழுதிவைக்க அவர் நண்பர்
எழுத...இன்னும்
யார் யாரோ எழுத
ராமாயணத்தை அனைவரும்
எழுதுகின்றனர்...
தாங்களே ராமனென்றும்
ராவணனென்றும்...
முடிவிலியாய் போகும்
காலத்தை ராமன்
நினைவிலியாய் மாற்றி
இறந்தகாலத்தை மட்டும்
திருப்பி திருப்பி
வருங்காலமாக்கி புன்னகைக்கிறான்
சீதையுடன்...
ஒன்றுமறியாத அஞ்சனை மைந்தனோ
ஏவுகணை போல்
நாடு விட்டு நாடு
தாண்டிக்கொண்டே இருக்க...

எழுதியவர் : ஸ்பரிசன் (7-Dec-18, 9:07 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 116

மேலே