சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

சிவகங்கை இராணி வேலு நாச்சியார் ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783சிவகங்கை தலைநகரான காளையார்கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்டபோது சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத்தேவரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் வேலுநாச்சியாருக்கே உரித்தாகும்.
1806-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி அதிகாலையில் வேலூர் படைவீரர்கள் புரட்சி செய்தனர்,பெண்களும் பங்கு கொண்டனர்.
ராணி சென்னம்மா கர்நாடக மாநிலம் 1824-1829
ராணி லட்சுமிபாய் வட இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடி பிரித்தானியருக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857ம் ஆண்டு, முதல் விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார்
ஜல்காரி பாய் 1857 - 58 ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில், ஜல்காரி பாய், ராணி லக்ஷ்மிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கினார்.
ராணி அவந்திபாய் நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு 1857 ஆம் வருடம், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார்
ஜானகி ஆதி நாகப்பன் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி ராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா இந்திய எல்லையிற் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீராங்கனையாகக் களம் கண்டவர்.
அன்னி பெசண்ட் ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல்' என்ற வாரப் பத்திரிகையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்.
சரோஜினி நாயுடு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார்.
ருக்மிணி லட்சுமிபதி 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார்
கஸ்தூரிபாய்காந்தி மகாத்மாகாந்தியின் துணைவியார்.
விஜயலக்குமி பண்டிட் ( ஜவகர்லால் நேருவின் சகோதரி)
சுசேதாகிருபளானி (ஆச்சாரிய கிருபளானியின் துணைவியார்)
மீராபென் (1892 – 1982) ஆங்கிலேய பெண்மணி இந்தியாவில் தங்கி இருந்தபோது மகாத்மாகாந்தியின் உதவியாளராக பணிபுரிந்தார் ,கிருஷ்ண பக்தையான இவருக்கு மகாத்மாகாந்தி வழங்கிய பட்டம் மீராபாய்.

எழுதியவர் : உமாபாரதி (7-Dec-18, 9:04 pm)
பார்வை : 1412

சிறந்த கட்டுரைகள்

மேலே