அவன் யாரென்று

அவன் அப்படி ஒன்றும்
அழகன் இல்லை
தூர தேசத்து
மன்னனும் இல்லை
அவன் எப்போதும்
இங்கேதான் இருப்பான்
எத்தனையோ ஆண்டுகளாய்
கடந்து செல்கிறேன் அவனை
கண்கள் சந்திக்கும் போது
அரைகுறை புன்னகை
தயங்கியே உதிர்க்கும்
வாய்மொழி பரிமாற்றம்
கிஞ்சித்தும் இல்லை
வர்ணனைக்கு அப்பாற்பட்டவன்
என கண்களை விட்டு
இல்லாமல் போனான்
அவன் இல்லாதுபோன
நாள்முதலாய் எல்லோரையும்
கேட்கிறேன் அவன்யாரென்று

எழுதியவர் : உமாபாரதி (7-Dec-18, 11:12 pm)
Tanglish : avan yaarendru
பார்வை : 249

சிறந்த கவிதைகள்

மேலே