வருவாய் நீ --- நையாண்டி மேளம் 2
வருவாய் நீ
என் ஆண்மை
கைகோர்த்து நடக்க -
வேண்டும் நீ
என் பாசம்
பிணைந்திருக்க -
வேண்டும் நீ
என் அன்பு
விரிந்து பட -
வேண்டும் நீ
என் ஆசை
அதிகாரம் செய்ய -
வேண்டும் நீ
என் மோகம்
உளறிக் கொட்ட -
வேண்டும் நீ
என் காதல்
கண்ணீர் சிந்த -
வேண்டும் நீ
என் காமம்
கடமையைச் செய்ய -
வேண்டும் நீ
என் கோபம்
மட்டுப்பட -
வேண்டும் நீ
என் இவ்வளவையும்
செய்ய
மனைவியானவளே -
விடுமுறை முடிந்து
எப்போது நீ
வீடு வருவாய் !