அழிக்காதீர்

காட்டுப் பகுதிச் சாலையிதைக்
கண்டு களிப்பீர் மானிடரே,
வேட்டை யாடும் நீங்களிந்த
வனப்பை யழித்திட வேண்டாமே,
காட்டுப் பாதையை விரித்திடவே
கரையில் மரத்தை வெட்டவேண்டாம்,
போட்டது போதும் வனமழித்து
போட வேண்டாம் வறட்சிவழியே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (8-Dec-18, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே