பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
============================ருத்ரா
இந்தக் கவிஞர்கள்
உன்னைப்பிடித்து
வண்ணங்களைச்சுரண்டி
சிறகுகளைப்பிய்த்து
கனவின்
பிக்காஸோ கோடுகளுக்கும்
வட்டங்களுக்கும்
பயணம் போய்
மைல் கல் நட்டி வைத்தார்
"காதல்" என்று.
இன்னும் உன்னைத்தான்
துரத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த மைல் கல்லுக்கு.
வண்ணத்துப்பூச்சியே
எங்காவது ஒளிந்து கொள்.
======================================