பெண்மனம்

உன்னை பார்க்கும் வரை நானாக
இருந்த நான் இன்று நானாக
இல்லை காரணம் நீ.....
என்று உன்னை காணனேர்ந்ததோ
அன்று தொடங்கிய படபடப்பு
கடல் அலையாய் தொடர்ந்து
என்னுள்......
உன்னை நெருங்க துடிக்கும்
இதயம் ஒருபுறம்...
உன் அருகாமையில் நாணம் கொள்ளும் பெண்மை ஒருபுறம்....
என்னை கொள்ளாமல் கொள்ளுதடா.....
வானில் உள்ள சூரியனை நெருங்க நினைக்கிறது மனம்....
ஆனால் அதன் அருகே நெருங்கினால் மண்ணில் உள்ள உறவெனும் உயிரை
பொசுக்கிவிடும் என்று
அபாய எச்சரிக்கை
விடுகிறது மூளை......
மூளைக்கும் மனதிற்கும் நடைபெறும் யுத்தத்திலும் மனம் வெற்றிபெற்று
உயிர் இல்லாமல் வாழ்வதைவிட மனம் தோல்வி கண்டு வாழ்வதே போதுமானது.......

எழுதியவர் : (9-Dec-18, 10:52 am)
சேர்த்தது : பனா
பார்வை : 128

மேலே