மாணவன்
மாணவரே !
மாணவரே !
நாளைய உலகின் தலைவர்களே !
எழுந்திடுங்கள் !
எழுந்திடுங்கள் !
நாளை நீங்களே !
மாணவரே !
மாணவரே !
நாளைய உலகின் உருவங்களே !
எழுந்திடுங்கள் !
எழுந்திடுங்கள் !
நாளை நீங்களே !
வெற்றி கொள்ளும் நேரமே நாம் வெற்றி கொள்வதால் மாறும் காலமே !
உலகை உணரும் நேரமே நாம் உலகை உணர்வதால் மாறும் உலகமே !
தூய உலகை படைத்திடுவோம் !
அதில் தூய்மை மட்டும் வளர்த்திடுவோம் !
கனவு கொண்டு வலம் வருவோம் !
நம் கனவால் உலகை வளர்த்திடுவோம் !
சுவாசம் கொள்ளும் காற்றை நம் கை விரலால் சுழற்றிடுவோம் !
நாசம் செய்யும் காற்றை நாம் நம் கல்வியால் அழித்திடுவோம் !
மாணவன் நினைத்தால் போதும் நல்ல மாநிலமே உருவடெக்கும் !
அவன் புத்தகம் சுமக்கும் நேரம் அவன் புத்தியில் கூர்மை வளமெடுக்கும் !
ஆயிரமே அவனால் முடியும் !
சூரியன் எழும் திசை மாற்ற முடியும் !
காகிதமே அவன் காலடி வீழ்ந்து !
அவனை பற்றி ஓர் சரிதம் எழுதும் !