அழியாது உன் நியாபகம்

நான் உருகும் மெழுகு
தான் பெண்ணே...
உன்னை நினைத்தே
உருகியவன் கண்ணே...
அன்று உன் மனதில்
நான் இல்லாத போதும்
இன்று உன் மனதில்
நான் இருந்த போதும்
உன்னால் உருகி
போனவன் நானடி அன்பே...
உன் சிறு சுவாசம் கொண்டு
உன் நினைவுகளை
அழிக்க நினைக்கிறாய் அன்பே
அழிந்து விடும் தீபம்
உருகிய உன் நினைவுகளை
என்ன செய்வேன் பெண்ணே...

எழுதியவர் : Bafa (11-Dec-18, 2:31 am)
சேர்த்தது : பஸாஹிர்
பார்வை : 714

மேலே