அவர் வருவாரே
கதவுக ளிட்டுக் கருணைய டைத்துக்
=கரிசன மற்றுக் கயவரு மெழிலோடே
பதவியெ டுத்துப் பயனுறு தற்குப்
=பரவச முற்றுப் பலமுறை வருவாரே!
உதவிக லற்றுக் கதறிய மக்கட்
=குதவுவ தற்குத் தவறிய தறியாதே
விதமிகு கட்சிக் கொடிகள சைத்துக்
=கொடியவ ரிக்கட் டதுதர வருவாரே