பாரதிக்கு ஓர் வாழ்த்து

L. K, G . படித்தென்ன பயன் .
M,B,B,S, முடித்தென்ன பயன்.
பட்டம் பெற்று என்ன பயன்.
பட்டதாரியாகி என்ன பயன் .../

நாடு விட்டு நாடு காதல்
பண்ணி என்ன பயன்.
ஊரு விட்டு ஊரு உறவைத்
தேடி என்ன பயன் ..../

இதயங்கள் இணைந்து
வாழ வழியில்லை.
இன்பங்கள் துன்பங்கள்
எதுவாக இருப்பினும்
நண்பர்களுக்கு அழைப்பில்லை .
வீட்டுப் படி மிதிக்க பிறருக்கு
அனுமதியில்லை.
வீட்டுக்குள்ளே உலாவுகின்றது
சாதி வெறியோடு தொல்லை .../

கெட்டு குட்டிச் சுவராகித் தான் போச்சு
இன்று வரை குட்டிக் குட்டி கிராமங்கள்.
ஆலமரத்தின் வேரிலும் நாட்டாமை சொம்பிலும் தான் அதன் உறக்கங்கள்.../

சாதி பார்த்து மனிதம் மறக்கும்
சாத்தான் கூட்டங்கள்
குண்டு சட்டிக்குள்ளே குதிரை
ஓட்டும் மந்தைகள்
இவைகளை அறிகின்ற போது
மனதிலே குதிக்கின்றது பல கேள்விகள் . .../

அறிவு தெளிவடைய படித்த
இளையோரும் சாதி என்னும் முக்காடு போட்டு நடமாடுகின்றார்களே அவை
தான் ஐயோ பெரும் வெட்கக் கேடு .../

நீங்களாவது கிழித்தெறிய
வேண்டாமா? சாதி என்னும் திரையை.
சாதிகள் இல்லையெடி பாப்பா
என்று அன்றே பாடி வைத்தான்
பாரதி இன்று அவன் பிறந்த நாளாம்
சாதி வெறியர்களும் போடுவார்கள் வாழ்த்துரைகள் பாரதியும் பாவமடா இறைவா ../

(மீள் நினைவு)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (11-Dec-18, 10:20 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 82

மேலே