நிர்வாணமாய்
![](https://eluthu.com/images/loading.gif)
உன் தோள்சாய்ந்து
நான் பார்த்த
இவ்வுலகம் என்
கண்களுக்கு தனி
அழகாய்
தொடாது துரத்தும்
அலைகள்,
தொலைதூர வானம்
கடலனைத்து தரும்
சத்தமில்லா முத்தம்,
ஆராவரமாய் வந்து
கரைத்தழுவும் கடலலை
யாவும்
ஆனந்த மயமாய்
என் கண்களுக்கு,
நீயின்றி நான்
தனி ஆக
கேள்விக்குறியாய்
இவ்வுலகம்
கரைத் தொட்ட
அலை
கடல் திரும்ப
அலை மோதும்
பெருங்குழப்பம்
இருள் போர்த்த
பேரிரைச்சலாய்
முச்சு திணறும்
கடலின்
பெருங்கலக்கம்
உன் நினைவுகள்
சுமந்த
என் காத்திருப்பும்,
என் மனச்சுமை
கூட
மண் கூட
நெகிழ்ந்தது
என் நிலை
நான் உனர்த்த
இனி செய்ய
ஏதுமில்லை
நீ வருவாய்
என
நிர்வாணமாய் காத்து
இருப்பதைத் தவிர..