சிறைபிடித்து
முத்து எடுக்கவா
இப்பொழுது
மூழ்குகின்றேன்
இல்லை
மொத்தமாய் மூழ்கிட
தான்
நிச்சயம் எதாவது
சொல்வாயென்ற
எதிர்பார்ப்பு!
அமைதிகாத்து
என்னை
கலவரப்படுத்தி
என்ன
பயன் உனக்கு?
அமைதியாகவே இரு
பரவாயில்லை
கடைசியாக ஒன்று
மட்டும்
"சொல்லிவிடவா"
உன் அனுமதியின்றி
என் கண்கள்
உன்னை சிறைபிடித்து
போவதை
உன்னால் தடுக்க
முடியாது!