பீனிக்ஸ் பறவை
பீனிக்ஸ் பறவை
.
ஐந்துமுறை தோற்றபின்தான்
துணை பார்க்கும் படலம்
முடிகிறது பலருக்கு ;
மனைவி அகாலத்தே மரித்தால்
மற்றொருத்தி
மங்களம் சேர்த்தல் நலமே ;
விதியின் கொடுமை
விதவைக்கோலம்
விருப்பக் கரம் நீண்டால்
மீண்டும் மாங்கல்யம்
நண்பா நீ கூட
பீனிக்ஸ் பறவை தான்
காதலில் தோற்றால் என்ன
காதலியை வெல்ல வேண்டாமா -
உலகினில் உயர உயர வாழ்ந்து !