என் காதலை நீ உணரும் நாள் எது 555
பெண்ணே...
உன்னை என்னில் நினைக்க
தொடங்கிய நாள் முதல்...
உன்னை வேறொருத்தியாக
நான் நினைத்ததில்லை...
என்னில் நீ பாதியென்று
நான் வாழ்கிறேன்...
என்னை நீ உன் உதட்டில்
மட்டும் ஏற்றுக்கொண்டாய்...
உள்ளத்தில் இல்லை...
இன்றுவரை என்னை
வேறு ஒருவனாக நினைக்கிறாய்...
உள்ளத்தில் என்னை
முழுமையாக ஏற்றுகொள்ளடி...
என்னை நீ தனிமை படுத்திபார்க்கும்
ஒவ்வொரு நிமிடங்களும்...
சொல்ல முடியாத வேதனைகளை
நான் சுமக்கிறேனடி...
என் அன்பை நீ
புரியும் நாள் எதோ.....