நட்பு- கதை , கவிதையில்

நதிக்கரையில் ஓர் பழ மரம்
கொய்யா பழமரம் , எப்போதும்
கொத்து கொத்தாய் சுவைத்தரும்
விதைகள் ஏதுமிலா இனிப்புமிகும்
கொய்யாப்பழங்களைத் தாங்கி
கிளிகள்,மைனா இன்னும் சிட்டுக்குருவிகளுக்கும்
இறை தரும் மரமாய் தழைத்திருந்தது
அம்மரத்தில் எப்போதும் இந்த
பறவைகளின் கூட்டம் மொய்க்க
அவை இன்பமாய் எழுப்பும் ஓசையும்
ஒரிசையாய் அங்கு விண்ணில் பரவி இருக்க
நதியில் ஏனோ வந்தடைந்தது
பக்கத்து ஊரில் புதியதாய் வந்த
தொழிற்சாலையின் கழிவு நீர்
நதி நீரில் கலந்தது நதிநீர் மாஸானது
பழமரமும் அந்நீரில் வளர மெல்ல மெல்ல
பொலிவிழந்து வலுவிழந்து கருக துவங்க
நாளடைவில் காய்களும் வெம்பி வீழ
பறவைகள் இம்மரத்தை விட்டு வேறெங்கோ போக
ஒரே ஒரு கிளி மட்டும் மரத்தையே சுற்றிவந்து
உண்ணாது உறங்காது கண்ணீர்விட்டது
மரமும் சாய்ந்தது ஒரு நாள் நீரின் நச்சு
வேரையறுக்க ................பாவம் கிளி
மரத்திற்காக கண்ணீர்விட்ட நன்றி மறவா
ஒரே ஜீவன் மரத்தோடு அதுவும் மாய்ந்தது

தனக்கு தினம் தினம் பலம் தந்த
கனி மரத்தை தனக்கு பால் தந்து
வளர்க்கும் தாய்போல் நினைத்தது
இனிய நாட்களில் மகிழ்ந்திருந்த கிளி
துன்பம் வந்தபோது மரத்தை மறந்து விடவில்லை

நல்ல நண்பர்களும் இப்படித்தான்
ஒருவன் துன்பப்படின் மற்றோருவன்
அதைக்கண்டு ஓடிவிடுவதில்லை
தன்னால் முடிந்தது செய்து தாழ்ந்தவனை
தூக்கிவிட பார்ப்பான் இல்லை எனில்
அவனோடே துஞ்சிடுவான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Dec-18, 8:13 pm)
பார்வை : 1210

மேலே