அவள் கண்கள்
வெண்ணிலவின் தன்னொளிப்பட்டு
அலர்ந்து விரிந்த குமுதம்போல்
இருந்த அவள் வெள்ளை விழித்திரையில்
அந்த கருவிழிகள் அக்குமுத மலரின்
தேனை உண்டு களிக்கவந்த கருவண்டுகளென
இருக்க கண்டேன் இன்னும் எப்படி சொல்லி
அவள் கண்களுக்கோர் கவிதை எழுதுவேன்
என்று எனக்குள் நான் கூறியதை
அந்தக் கண்களுக்குரியவள் எப்படி கேட்டாளோ
தெரியவில்லை , என்னெதிரே இப்போது அவள்
நின்றுகொண்டிருக்க கற்பனையில் நான்
கருவண்டானேன் சிறகடித்து இதோ
வெண்குமுதமாம் அவள் கண்களின்மேல்
அதுதரும் தேனை உண்டு சுவைக்க
சுற்றிவந்தேனே!