பணம்

ஏழ்பிறப்பே ஆனாலும்
பாமரனின் பகடைக்காய்
ஏணியில்லா பாணமது
நாட்டம் இல்லா ஊறுமேது
அவை இல்லா மனிதனுக்கு
பிணம் என்றே பெயருண்டு
பசித்தவனும் பட்டினியால்
பரதேசி ஆகிடுவான்
கிடைத்தவனின் கைகளுமே
கனமாக பற்றிக்கொள்ளும்
குணம் உள்ள மனிதனுக்கும்
இவை இல்லா நிலையுண்டு
பகை என்று வந்துவிட்டால்
பவ்வியமாய் கைகொடுப்பான்