இதயத்தில் நிறைந்திருக்கும் என்னுயிரே 555

என்னுயிரே...

நான் உன்னை பிரிந்திருப்பது
உண்மைதான் மைக்கல் பலதாண்டி...

உன்னை மறந்து நான்
இருந்ததில்லை வினாடிகூட...

என் நிழலில் நீ இல்லாத
இந்த நாட்கள் எல்லாம்...

என் வாழ்வில் வெற்று
காகிதம்தான்...

என் நினைவெல்லாம்
நிறைந்திருக்கும் என்னுயிரே...

என் கைபேசியில் ஒலிக்கும்
மணிகளின் இசைதான்...

நம் காதல் தினம்
பூஜிக்கப்படுகிறது...

என்றும் நீங்காத
உன் நினைவில் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (14-Dec-18, 5:35 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 728

மேலே