எனது புகைப்பட அழகி

சேலை அணிந்த மங்கை,
இரு பக்கம் சூழ்ந்த குடும்ப உறவுகள்,
மெல்லிய புன்னகையுடன் ஈற்ற பற்கள்,
கருங்கூந்தலில் உல்லாசமாய் ஆடும் மல்லிகை மலர்கள்,
சேலையை அணைத்தவாறு இரு கை சேர்ந்து நிற்கும் கரங்கள்,
பார்ப்பவர் கண்களை ஈர்க்கும் பூனை கண் விழிகள்,
சூரிய கதிர்கள் வெட்கப்படும் அளவிற்க்கு செக்க சிவந்த இதழ்கள்,
வாள்கள் தலைகுனிய வைக்கும் கூர்மையான நுகரும் மூக்கு,
இவை அனைத்தையும் புகைப்படத்தை பார்த்து விழுந்த என் மனம்,
நேரில் காண துடிக்கும் அவள் நினைவுகள்,
கண்களில் கண்ணீர் சொட்ட சொட்ட துடிக்கும் இதயம்,
இவள் கிடைத்தால் அனைத்தும் சாதித்ததாய் என்னும் எண்ணம்,
அவளே என் அழகி ச_____!!!!!!!!!!!!!!!!!!!!
- ஜெயப்ரகாஷ்

எழுதியவர் : ஜெயப்ரகாஷ் (14-Dec-18, 8:19 pm)
சேர்த்தது : jayapragash
பார்வை : 262

மேலே