என் காதலே

என் காதலே,

அதீத அன்பினை
அள்ளித்
தெளிக்கிறாய்

அகம் நிறையக்
காதலைக்
கொட்டித்தீர்க்கிறாய்

சோர்வு தரும்
தனிமையை
விரட்டியடிக்கிறாய்

நெடிய பயணங்களின்
நேரம்
குறைக்கிறாய்

உன் தவிப்பான
தருனங்களில்
தாயாக்குகிறாய்

மீண்டும் என்னைக்
குழந்தையாய்
மாற்றி விடுகிறாய்

எழுதியவர் : புவி (14-Dec-18, 8:43 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : en kaathale
பார்வை : 415

மேலே