பிற நாயா

வாடா முருகா. கல்யாணம் பண்ணீட்டு வடக்க போனவன் ரண்டு வருசம் கழிச்சு ஒரு பையன் பொறந்ததுக்கப்பறம் தான் மனைவி பூங்கொடியோட வந்திருக்கிற..நல்ல இருக்கிறீங்களா சாமி.
==++
பெரியம்மா 'முருகன்'னா இருந்த நான் வடக்க போனதும் 'முருகன்ஜி' -ன்னு பேர மாத்திட்டேன்.
==++
என்னது முருகன்சியா? ஏன்டா முருகனுக்கு என்னடா ஆச்சு. அதுகூட சி சேத்துகிட்ட.
==×+
பேரோட 'ஜி' சேத்துகிட்டாத்தான் மதிப்பு.
==++
சரிடா முருகன்சிசி. ரண்டு பங்கு மதிப்பு. சரி எம் பேரன் பேரு என்னடா முருகன்சிசிசி.
==×+
என்னங்க பெரியம்மா கிண்டல் பண்ணறீங்க? பையன் பேரு பிரனாய்.
==++
என்னது பிற நாயா? ஏன்டா பெத்த பிள்ளைக்கு அடுத்தவங்க நாயி, வளக்கற நாயின்னெல்லாம் பேரு வைக்கிறதா? அநியாயண்டா முருகன்சிசிசி.
===++
பெரியம்மா பிறநாய் இல்ல. பிரனாய்.
==+×
ரண்டு பேருக்கும் வித்தியாசமே தெரீலயே.
==××
எண் கணித சோதிடர் வச்சபேரு பெரியம்மா. நல்ல அர்த்தமெல்லாம் இருக்குது.
==++
சரிடா. நம்ம ஊரு பசங்க இந்தப் பேரக் கேட்டா "அதோட அங்க நிக்கறானே அந்தப் பையன் பேரு நாயுடா.பிறநாயுடா" ன்னு பேசிக்குவாங்கடா.
==+++
பெரியம்மா, நாங்க மூணு நாளைக்குத்தான் நம்ம ஊரில இருப்போம். வடக்க போனா மறுபடியும் ரண்டு வருசங் கழிச்சுத்தான் வருவோம்.
==++
சரிடா சாமி முருகன்சி.
======================================■■■■■■■■■■■■■■■■■■■
Pranay = love, affection, friendship.

எழுதியவர் : மலர் (15-Dec-18, 7:59 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 97

மேலே