அன்பிற்குரிய --- நையாண்டி மேளம் 2
அன்பிற்குரிய
தாய் தந்தை  நினைவைப்
பகிர்ந்தால்     ஏளனம்  ;
அக்கா தங்கை 
பேசும் வேளை 
ஓரப் பார்வை  ;
சொந்தம் வீட்டில்  தங்கினால் 
சலிப்பு  ;
வெளியூர்  பயணத்திடை 
வாய்  நீளம்  ;
இரவில் நல்ல நேரத்தில் 
விசாரணை  -
என் மனைவி  ஒரு 
அன்பிற்குரிய    எதிரி  !
 
                    
