துணையாய்
துணிச்சல் நெஞ்சில் துணையிருந்தால்
தோணியும் படகும் தேவையில்லை,
பணியா அலைகள் நிறைந்திருக்கும்
பரந்த கடலின் மீதினிலும்
துணையாய்த் துண்டு மரமிருந்தால்
துடுப்பாய்க் கைகளைக் கொண்டேதான்
துணிந்து செல்லலாம் தூரதேசம்
தெரிந்து கொள்வாய் தம்பிநீயே...!