தலைநிமிர்ந்த தன்னடக்கம்
பூக்காரி வாழ்க்கை
துர்மணம் வீசுவதற்கும்
மீன்காரி வாழ்க்கை
நறுமணம் வீசுவதற்குமானத்
தீர்மானத்தை தன்னகத்தே வைத்துத்
தன்னடக்கத்தோடு தள்ளாடாமல்
தலைநிமிர்ந்து நிற்கிறது
ஒவ்வொருத் தெருவிலும்
ஒவ்வொரு சாராயக்கடை.
பூக்காரி வாழ்க்கை
துர்மணம் வீசுவதற்கும்
மீன்காரி வாழ்க்கை
நறுமணம் வீசுவதற்குமானத்
தீர்மானத்தை தன்னகத்தே வைத்துத்
தன்னடக்கத்தோடு தள்ளாடாமல்
தலைநிமிர்ந்து நிற்கிறது
ஒவ்வொருத் தெருவிலும்
ஒவ்வொரு சாராயக்கடை.