விவசாயம் பழகுவோம்

வா நண்பனே !
வயலுக்கு செல்லலாம் !
சேற்றில் கால் வைத்து சோற்றை நாம் செய்யலாம் !
படித்து படித்து பட்டதாரி ஆகி வெளிநாடு சென்ற காலம் போகட்டும்!
மறந்து மறந்து தாய்மொழி மறந்து தாய்நாட்டை மறந்த காலம் மறையட்டும் !
இனி உள்ளூரிலே உழைத்திடுவோம் உழவன் என்றாலும் பெருமை அல்லவா !
நம் நாட்டை நாம் வளர்த்திடுவோம் நம் நாகரீகங்கள் புதுமை அல்லவா !

இளைஞர் கூட்டம் இணைந்துவிட்டால் இன்பம் எங்கும் பரவி நிற்குமே !
வாலிபர் கூட்டம் வயலில் நடந்தால் வறண்ட நிலமும் பசுமை காணுமே !

கணினி அறிவு இருக்கு நமக்கு !
வெளிநாட்டு சரக்குகள் நமக்கு எதுக்கு !
ஒதுக்கு ஒதுக்கு இருளை ஒதுக்கு !
வெளிச்சம் ஏற்றிடும் நேரமே !
அது ஒருநாள் நிலையாய் மாறுமே !

வயலை புதுப்பித்து புது வழி விவசாயம் செய்வோம் வா !
ஐயம் ஏற்பட்டால் நம் முன்னோரை நாடலாம் வா !
கைகள் கோர்த்து கொண்டு நாம் வானம் செல்வோம் வா !
வையம் செழிக்கத்தான் நாம் அயராது உழைப்போம் வா !

காற்று எங்கும் வீசுமே !
காற்றோடு நெற்கதிர் பேசுமே !
நமது மண்ணின் வாசமே !
அது நாடு கடத்தும் வீசுமே !
மழைக்கு பஞ்சம் இருக்காது !
இனி பசி பட்டினியும் இருக்காது !
வீரம் என்றும் குறையாது !
இனி விவசாயின் மனமோ உடையாது !

பழகுவோம் !
தலைமுறை கடந்தும் பழக்குவோம் !
பரப்புவோம் !
விவசாயத் தேவையை பரப்புவோம் !

வா ! நண்பனே ! .

எழுதியவர் : M. Santhakumar . (17-Dec-18, 6:25 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 2840

மேலே