காதல்

குங்கும பொட்டிட்ட
வட்ட வட்ட ஒளிபடைத்த
உந்தன் வண்ண முகம், எனக்கு
கருப்பு நிலவாய் காட்சி தருகுதடி
அதில் அன்றலர்ந்த சிவந்திப்பூவாய்
அமைந்த உன் இதழ்கள்
கருப்பு நிலவில் ஓர் சிவப்பு
மேகக் கீற்றாய் காணுதடி கண்ணம்மா,
வாரிப்பின்னிய கார்க்கூந்தலில்
நீ வைத்த முல்லைச்செண்டு,
அது தரும் நறுமணம் என் மனதை
மயக்கி உன்னிடம் ஈர்க்குதடி
உன்னருகே வந்து காதல் உறவாடலாம்
என்று நினைத்து வந்த என்னை
'அங்கேயே நின்றிடுவாய் என் மன்னவனே
இந்த திங்கள் கழிந்து அடுத்துவரும்
தைப்பூச திருநாளில் மங்கள ஒலி கூட
என் உற்றார் உறவினர்முன் ஊரறிய
மங்கள நாண் ஏற்றி மூன்று முடிச்சு
என் கழுத்தில் நீ அலங்கரிக்க
இந்த உந்தன் கருநிலவோடு
உறவாடலாம் நீ வெண்முகிலாய்
இனிதாய் காலமெல்லாம் என்றாயே

எந்தன் கருநிலவே என்னே உன் அழகு,
என்னென்பேன் அதை மிஞ்சும் நீ
பேசும் கொஞ்சும் கொங்கு தமிழழகு
அது கேட்க கேட்க என்னுள் வீசுதே
நறுமணம் நான் விரும்பும் மகிழம்பூவாய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Dec-18, 6:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 160

மேலே