ஜில்லென்று இதயம் சிலிர்க்க
நான் உன்னை நினைக்க
நீ வந்தாய் கனவில்
நீ என்னை நினைக்க
நான் வந்தேன் எதிரில்
நாம் இருவரும் எதிர் எதிரில்
எங்கும் நிசப்தம் அந்நொடியில்
வார்த்தைகள் வாய்வர எத்தனித்தாலும்
ஜில்லென்று இதயம் சிலிர்க்க
வில்லெறிந்த அம்பாய் நீ ஓட
நில்லென்று அழைக்க உரிமையில்லாமல்
பல் இளித்து நின்றேன் நான் பாவமாய்
_ _ _ நன்னாடன்