பூக்காரி நீ...
நீ
பூக்காரி
உனை
கொய்யலாம்
வாசம்பிடிக்கலாம் நேசம்கொண்டு
உலுக்கலாம்
காதல் சொல்லி
மயக்கலாம்
மாலையிட்டு
பூசிக்கலாம்
நீ வனக்காரி
வயதில் ஒத்த
நிறக்காரி
பார்வைக்கு நீ
இளவரசி
முத்தமிட நேசிக்கும்
மழலைவாசி
பொதுவாய்
என்னசொல்ல
இந்த பூலோகம்
தேவதைக்காரியை வசியம்செய்ய பூத்திருக்கும்
மனிதவள நாகரிகம்
உனை கடத்தலாம்
நீ தொலையலாம்
வாய்ப்புண்டு
பத்திரமாக நட
புன்கைத்தே முரை கொஞ்சு பாத்துக்கொள்ளலாம் நேசமுடன் பலர் இருக்க நானுமிருக்க
நயத்தோடு நடைபோடு என் இராசாத்தி...