பொன்னான பொழுதுகள்

அன்று...
பெரிதாக பொழுதுபோக்கு
இல்லாவிட்டாலும்
பொன்னான பொழுதாகவே
மாற்றிய
டீக்கடை அரட்டை...☕
ஊர் நியாயமும்
உலக நியாயமும்
சங்கமிக்கும் வீட்டு வாசல்...😳
தட்டி தட்டி
ஒட்டி கேட்கும்
வானொளி...📻
வெள்ளிக்கிழமைக்காக காத்திருக்கும் கானொளி...📺
தூங்காத இரவின்
சிரிப்புகள்...😆
விளையாட்டு அரங்கமான
வீதிகள்...🏃🏃‍♀
நண்பனான நாளிதழ்கள்...📖
இன்னும் ஏராளமுண்டு...
அன்று
முகங்கள் பல தெரிந்து
பொழுதுகள் சில ஆனது...
இன்று
முகங்கள் மழிந்து
பொழுதுகள் பல ஆனது...

எழுதியவர் : வெ.பவித்ரா (19-Dec-18, 9:13 pm)
Tanglish : ponnana poluthukal
பார்வை : 211

மேலே