கண்டாங்கி சேலை மூடி

கண்டாங்கி சேலை மூடி
கண்ணயர்ந்து படுத்தேன்
கனவிலே அவள் வந்தாள்
மனதில் குடி பெயர்ந்தாள்

தழுவிய அவள் சேலை வாசம்
என் நாசியை எட்ட... நழுவிய
அவளென் பக்கம் வந்தாள்
இதழில் தேன் சொட்ட...

என் கனா நனவானது
உண்மை என்றால் நான்
கனாக்கள் ஆயிரம் தினம்
காண்பேன் அன்பே...

நீ நினைப்பது போல் காதல்
எப்போதும் கானல் நீரல்ல...
கை கொடுத்தால் கரையேறும்
நான் வேறென்ன சொல்ல....

எழுதியவர் : ஜெய் ரெட்டி (19-Dec-18, 9:13 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 519

மேலே