தேரையர் பதார்த்த குண சிந்தாமணி ஜலவகை

ஜலவகை
மாரிஜலம்
புத்தகத்தின் அச்சின் படி

சீதமுறுங்குளிர்ச்சி சேருமேசித்தத்தத்துட்
போதந்தெளிவாய்ப் பொருந்துங்காணா தமொடு
விந்தும்வளர்ந்துவரு மேதினியிலெவ்வுயிர்க்குஞ்
சிந்துமழை நீராற்றெளி

வெண்பா இப்படியிருக்கலாம்

சீத முறுங்குளிர்ச்சி சேருமேசித் தந்தத்துட்
போதந் தெளிவாய்ப்பொ ருந்துங்கா- ணாதமொடு
விந்தும் வளர்ந்துவரு மேதினியி லெவ்வுயிர்க்குஞ்
சிந்துமழை நீராற் றெளி

சீதளம் பொருந்திய மாரிநீரால் ஜீவராசிகளுக்கு நல்லறிவு சுக்கிலம், சுரோணிதம் இவை பெருகும் என்க


ஆலங்கட்டி ஜலத்தின் குணம்.
புத்தகத்தின் அச்சின் படி

வெண்மாசிமேகமுடன் வீறும்பெரும்பாடு
கண்மாசிகாந்தல்கடிதகற்றுந்கண்மீறும்
விக்கற் சுவாசமுடன் பெய்மயக்கமும்போக்குங்
கக்குமாலாங்கட்டி காண்

வெண்பா இப்படியிருக்கலாம்

வெண்மாசி மேகமுடன் வீறும்பெ ரும்பாடு
கண்மாசி காந்தல் கடிதகற்றுங் - கண்மீறும்
விக்கற் சுவாசமுடன் பெய்மயக்க மும்போக்குங்
கக்குமா லாங்கட்டி காண்

ஆலாங்கட்டி நீரானது சிலேஷ்மப்பிரமேகம் பெரும்பாடு நேத்திரத்தில் புகைக்கம்மல் கைகால் எரிவு விக்கல் சுவாசம் மயக்கம் இவைகளை நீக்கும் குளிர்ச்சியையுண்டாக்கும்.

பனிநீரின் குணம்
புத்தகத்தின் அச்சின் படி


பனிசலத்தையெல்லுதயமத்தில்பானஞ்செயவாரை
தனிச்சொறி சிரங்கு குட்டந் தாபந் தொனிதியங்கால்
முத்தோஷநீரிழிவு மூடழல்கிராணியிவைக்
கொத்தோடுதாழ்ந்தகலும் கூறு

வெண்பா இப்படியிருக்கலாம்

பனிசலத்தை யெல்லுதயத் தில்பானஞ் செய்யத்
தனிச்சொறிசி ரங்குகுட்டந் தாபந் - தொனிதியங்கால்
முத்தோஷ நீரிழிவு மூடழல்கி ராணியிவைக்
கொத்தோடு தாழ்ந்தகலும் கூறு


பனிநீரை சூரியோதயத்தில் அருந்தினவர்க்குச் சொறி,கிரந்தி குஷ்டம் தாபம் காசம் கிராணி தனிவாதங் கோபம்- திரிதோஷம் தேகவறட்சி நீரிழிவு ஆகியவைகள் இல்லை

தண்ணீரின் குணம்
புத்தகத்தின் அச்சின் படி

தண்ணீர் குணமெல்லாந் தான்கேண்மடமயிலே
மண்ணின்குணமல்லான்மற்றுமுண்டோ உண்ணுங்கால்
ஆறுகுளமோ மடு வாழ்ந்தகூபஞ்சனையுள்
ளூரருவியென்னு முலகு

வெண்பா இப்படியிருக்கலாம்

தண்ணீர் குணமெல்லாந் தான்கேண் மடமயிலே
மண்ணின் குணமல்லான் மற்றுமுண்டோ - உண்ணுங்கால்
ஆறுகுள மோமடு வாழ்ந்தகூ பஞ்சுனையுள்
ளூரருவி யென்னு முலகு



தண்ணீர் குணமெல்லாம் மண்ணின் குணமே யன்றிவேறில்லை அதன்விவரம் ஆறு ,குளம், ஏறி, மடுவுப் கிணறுசுனை என்னும் ஆறு வகை இடங்களில் தங்கி அவ்வற்றின் குணங்களைப் பெற்ற நீரையுன்னுமிடத்தில் அவ்வவ்விடத்தின் பெயர்பெற்ற நீரெனச் சொல்வர்.



ஆற்றுநீரின் குணம்
புத்தகத்தின் அச்சின் படி


ஆற்றுநீர்வாத மனவங்கபத்தோடு
தோற்றுகின்றதாகந் தொலைக்குமே ஊற்றமிகுந்
தேகத்தினோயையெல்லாஞ் சீறித்துரத்திடும்
போகத்திற்றா துவுமாம் போற்று

வெண்பா இப்படியிருக்கலாம்

ஆற்றுநீர் வாத மனவங்க பத்தோடு
தோற்றுகின்ற தாகந் தொலைக்குமே - ஊற்றமிகுந்
தேகத்தின் நோயையெல்லாஞ் சீறித்து ரத்திடும்
போகத்திற் றாதுவுமாம் போற்று

ஆற்றுநீரானது வாதம் பித்தகொபம் கபதொஷம் தாகம் சரீரத்திற் பித்தசம்மந்தமான சிர்சிலரோகம் ஆகிய இவைகளைபோக்கும் சுக்கிலவிருத்தியை உண்டாக்கும்.

நதி நீர்கள் தொடரும்.

எழுதியவர் : பழனிராஜன் (20-Dec-18, 3:00 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 58

சிறந்த கட்டுரைகள்

மேலே