வாழ்க்கை

வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
நண்பா வாழ்ந்திடலாம்
பூமியிலே பல பாதையுண்டு
நாமும் வாழ்ந்திடலாம்
உன் பார்வை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பாதையுண்டு
உன் இரவை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பகலுமுண்டு
நீ மழையை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெயிலுமுண்டு
நீ துயரை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெற்றியுண்டு
நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா
தொலைந்து போன வாழ்வை
நினைத்து பயணம் செய்தாலே
மழைத்துளிகள் கூட
மிரட்சியாகும் - மிரண்டு விடாதே
தொலைவில் தெரியும் வாழ்வை
தேடி பயணம் செய்தாலே
வானம் கூட
வாசலாகும் - வருத்தப்படாதே
தோல்வியில்லா மனிதனை
காட்டு
காயமில்லா மனிதனை
காட்டு
வெற்றி மட்டும் வாழ்க்கை
என்றால்
ஜனனம் என்ன அர்த்தம்
சொல்லு
வானம் போல உள்ளம் வைத்தால்
மேகம் போல தோல்வி எல்லாம்
காற்றடித்தால்
கலைந்தே போகும்
மூன்றாம் "கை"யை நீயும்
இழந்தால்
உன் நம்பிக்"கை"யை நீயும்
இழந்தால்
உண்மையான தோல்வி
அது தான்
தெரிந்து கொள் நண்பா நண்பா
நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா