பணம்
உலகின் மிகச்சிறந்த துரோகி...
கருவுக்கும், சிதைவும் காசாகி போனதாலோ...
கடவுளும் இங்கே காசாகிறான்...
கொடுக்கும் போது கடவுளாக்கி
வாங்கும் போது அரக்கனாக்கி
அரசனையும் ஆண்டியாக்கி
ஆண்டியையும் அரசனாக்கி
கல்லுக்கும், கள்ளுக்கும் விலை போனாயே.. பாவி தண்ணீருக்கும் விலையாகினாய்...
இருப்பனிடம் ஒரு மதிப்பு
இல்லாதவனிடம் ஒரு மதிப்பு
உன்னால் அவளும் தாயகிறாள், அவனும் தாயாகிறான்....
தலை நிமிர வைக்கும் நீயே தலைக்குனிய வைக்கின்றாயே..
பிறப்பிலும் நீயே! இருப்பிலும் நீயே! இறப்பிலும் நீயே! நீயின்றி நானில்லை...
நீ நண்பனா? தோழனா?எதிரியா?
நீ வாழ்வின் வரமா?சாபமா?
விடை அறியா கேள்வியுடன்