உன்னிடத்தில்
நிலா வண்ணமல்லல
நிழல் வண்ணமது - அழகு
உன்னிடத்தில்,
என் திமிறும் தீர்ந்திடும்
திமிலும் - உன்னிடத்தில்,
குறை என்று ஏதுமில்லை
கொள்கைக்கு ஒன்றும் குறைவில்லை கோபம் வென்ற - உன்னிடத்தில்,
வார்த்தைகளெல்லாம் வரிகள் தேடும் அன்பெல்லாம் ஆழம் தேடும்
என்னில் அக்கறை கொண்ட - உன்னிடத்தில்
சொல்லி முடிக்க வழியில்லை
எழுதி முடிக்க மனமில்லை
முடிவில்லா பயணம் அது -
உன்னிடத்தில்...