பையம் பேரு சவுரியா

வாடா கண்ணுச்சாமி. கலியாணம் பண்ணீட்டு வடக்க போயி ரட்டைக் கொழந்தைகங்களப் பெத்து மூணு வருசம் கழிச்சு நீ குடும்பத்தோட நம்ம ஊருக்கு வந்திருக்கற. எல்லாம் நல்லா இருக்கறீங்களா?
@@@
உங்க புண்ணியத்தில நாங்க நல்லா இருக்கிறோம் அம்மாச்சி.
@@@@
நீ புண்ணியம் செஞ்சவன்டா கண்ணுச்சாமி. உன் மனைவி மொதப் பிரசவத்திலேயே ஒரு அழகான பையனையும் பொண்ணையும் பெத்துக் குடுத்துட்டா.
@@@@
எனக்கும் ராசாத்திக்கும் நல்ல பொருத்தம் அம்மாச்சி. அதான் இந்த ரட்டைக் கொழந்தைங்க.
@@@@
கொழந்தைங்க பேரு என்னடா கண்ணுச்சாமி?
@@@@
பொண்ணுப் பேரு கெளரி.
@@@@
கவுரி, நாங் கேளுவிப்பட்ட பேருதான்.
சரி பையம் பேரு என்னடா கண்ணுச்சாமி.
@@@@
பையம் பேரு செளரி.
@@##
பையம் பேரு சவுரியா? கவுரி. சவுரி.
நல்ல பொருத்தமான பேருங்கடா. பையன் சவுரி வச்சு சடை பின்னிக்கட்டும்ன்னா அவுனுக்கு சவுரின்னு பேரு வச்ச?
@@@@
இல்லங்க அம்மாச்சி. செளரின்னா சூரியனின் மகன்னு அர்த்தம்.
@@@@
அருத்தம் நல்லாத்தான் இருக்குது..நம்ம ஊரு சனங்க எங் கொள்ளுப் பேரன 'சவுரி, சவுரி'ன்னே கூப்புட்டு கிண்டல் பண்ணுவாங்களே!
#@#@
அதனால என்னங்க அம்மாச்சி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Sauri = son of the Sun.
Gauri = fair woman, Goddess Parvati

எழுதியவர் : மலர் (26-Dec-18, 11:17 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 111

மேலே