பொன்சித்திரமே...

சின்னவளே வெண்ணிலா
கண்மணியே விளையாடு
சிறுபிள்ளை நீயெனக்கு
எத்தனை உயரம்
வளர்ந்தாலும்
பிஞ்சுமணி தானெனுக்கு
ஒருவாய் ஊட்டிக்கடி
பருப்பு சாதம் அம்மா தறேன்
கிட்டவாடி செம்பூவே
வீதி முழுக்க கால் பதிச்சி குதிச்ச நீயும் விளையாடு குட்டிநிலா நீதானே
பெத்தவ அதபாத்து கொண்டாடும்
வரம்கொடு அப்பன் பாட்டி
உச்சுக்கொட்டி வீதிமுழுக்க
தத்தி தாவி பாதம்பதி பணிமலரே என்குலசாமி
சொன்னதுபோல் என் ஆத்தா நீதாண்டி இந்த அந்திநேர விளையாட்டு எம்புட்டு சந்தோஷம் அள்ளிதர
இத காண கொடுத்து வைக்கலையே உந்தாத்தனுக்கு
பேத்தி முத்தே என் சாமி உச்சுக்கொட்டி முத்தமிட்டு சுத்திவரும் கெழவன் போனானே ஊர் வடக்கே
என் சாமி சின்னவளே
என் வீட்டு வெண்ணிலவே ஓடி வாடி குட்டிப்பூவே
கன்னம் கிள்ளி முத்தமிடும்
என் வீட்டு ராசாத்தியே ஒடி வாடி பொன்சித்திரமே...

எழுதியவர் : ..##சேகுவேரா சுகன்.. (27-Dec-18, 8:25 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 43

மேலே