நீ அந்த வானவில்தான்

சற்று வளைந்து நின்றால்
நீ அந்த வானவில்தான் !
நீ நிமிர்ந்து நின்றால்
அந்த பாரதியின் புதுமைப் பெண்தான் !
சற்று வளைந்துஅசைந்து நீ வந்தால்
அந்த அஜந்தாவின் ஓவியம்தான் !
அந்தி சாயும் பொழுதினில் அருகில் வந்து
என் தோள் சாய்ந்தால்தான் நீ என் காதலி !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-18, 10:16 pm)
பார்வை : 124

மேலே