அவள் அழகைவிட அழகு- தமிழ் அவளைவிட அழகு

அவள் அழகைவிட அழகு-
தமிழ் அவளைவிட அழகு

*அவள்
அகவை பதினாறில்
இளநிலவென
ஒளிர்ந்தாள்.

இணையற்ற
இணையளான பொழுதில்
உயிரானாள்.

மகவொன்றை
ஈன்ற பொழுதில்
தாயென
தொழுபவள் ஆனாள்.

இன்று
எம் தாய் போன்றே
எம்முள்
வாழ்வியலின்-
அறத்தையும்
அன்பையும்
செதுக்கியவள்
அவள் மட்டுமே.

* தமிழ்...
அவளை நேசிக்கும் முன்
எம்
வாசத்தை
வசப்படுத்தியவள்
தமிழ் எனும்
இனி்யாள்.

இயல் இசை நாடகம்
என
எம்
செல்களில்
நீக்கமற
நிறைந்தவள்.

அவளது
மொழியழகில்
மயங்காதவர்
எவர்?

கன்னலையும்
கனலையும்
கயலில்
சூடிய
சுடர் கொடியாள்.

** அவளும்
தமிழும்
அழகால்
செந்நீரானவர்கள்.

தாய்மையால்
தகைமை கொண்ட
அன்னையர்
இவ்விருவரையும்
வணங்கி மகிழ்வோம்
நாளும்.

- சாமி எழிலன்

எழுதியவர் : சாமி எழிலன் (29-Dec-18, 5:19 pm)
சேர்த்தது : Saami Ezhilan
பார்வை : 62

மேலே