காபரே நடனம்- ஒரு பெண்ணின் கற்பு பறிபோகிறது
மேடையில் ஆட வருகின்றாள்
நடனமாது , கழுத்திலிருந்து
கால்கள் பாதங்கள் வரை
ஆடைகளில் முழு அலங்காரம் ...............
ஆடல் இப்போது துவக்கம்
ஏதோ புரியாத ஒரு இசைக்கு
ஆடுகிறாள்.......மேடையிலிருந்து
இதோ அவள் கீழே இறங்கி
தரையில் நாற்காலிகளில்
குழுமி இருக்கும் ஆண்கள் கூட்டம்..
நாடு நடுவே சில பெண்களும் உண்டு
இங்கும், அங்கும், .......நடன மாது
இப்போது அவர்களைச்சுற்றி சுற்றி ஆடுகிறாள்
சில ஆடவர், அவளை காமக்கண்ணால் நோக்கி
அவள் கச்சையின் திறந்த பாகத்தில்
ரூபாய் நோட்டுகளை வைக்க.....
பறந்து போகிறாள் நடனமாது............மேடைக்கு
இப்போது மணி இரவு பன்னிரண்டு....
விளக்கு அணைக்கப்படுகிறது....
மேடையில் ஒரேயொரு விளக்குமட்டும் எரிகிறது
விதிவிலக்காக, நடனமாதின்மீது பட்டவாறு
இசை இப்போது ராக்காத ரூபம் எடுக்க
மங்கை அவள் தன துகிலை தானே
ஒவ்வொன்றாய் உரிகின்றாள் ......துச்சாதனன்
யாரும் அங்கில்லை ....
முழுநிர்வான நிலை அடையும் தருவாய்...
நாடகமேடை இருள் சூழலில்.....
ஒரு பென்சில் அளவு ஒளி மட்டும்
இப்போது நடனமாதின்மீது ...................
ஒரு நொடி நிசப்தம்....பின்
அட்டகாச இரைச்சல், விசில் ஒலி....
வந்திருந்த மக்கள் எதை கண்டார் ...
எதற்கு இந்த கரகோஷம்
இந்த வெறியாட்டம்........................
நடனமாது இப்போது காணாமல்
'கிறீன் ரூமுக்குள்' ஐக்கியம் !
பழையபடி , மேடையில் விளக்குகள் எரிகின்றன
இப்போது ..... பார்க்கவந்த மக்கள்
காமப் பசியை தீர்த்துக்கொண்டு.....
வயிற்று பசிக்கு தீர்வுகாண ........
உணவு பரிமாற்றம்''''.....................
ஒரு பெண் , தன் கற்பு விலைப்போக
மானத்தை மறந்து நடனமாடுகிறாள்
இதைப் பார்த்து ரசிக்க ஓர் கூட்டம் !
இவர்கள் , இவர்களில் பலர் நகரத்து
முக்கிய பிரமுகர்கள்...!!!!!!!!!!!!!!
இப்படியோர் நடனம் தேவைதானா ?
ஏன் இந்த காமப் பசி மனிதருக்கு ?