வெனகாரப் புள்ள

அடியே ராசாத்தி, அங்க உக்காந்திட்டு இருக்கிறாளே அவ யாரடி? அவ யாருடி?
@@@
அவ என்னோட வகுப்பில படிக்கிறவ.
@@@@
அவ பார்வையே சரியில்லையே.
@@@@
ஆமாம் பெரியம்மா. நல்லவ மாதிரி கூட இருந்துட்டு சிண்டு முடிஞ்சுவிடறதில ரொம்ப கெட்டிக்காரி.
@@@@
என்னடி அவ ரொம்ப வெனகாரப் புள்ளயா இருப்பா போல இருக்குதே!
அவ பேரு என்னடி?
@@@@
அவ பேரு வினயா.
@@@@
பாத்தியா. அவ எதிர்காலத்தைக் கணிச்சுச் சொன்ன சோசியரு அவளுக்கு பொருத்தமான பேரா வசீசிருக்கறாரு.
@@@@
பெரியம்மா, வினயா இந்திப் பேரு. அந்தப் பேருக்கு என்ன அர்த்தமோ?
@@@
என்ன அர்த்தமோ இருந்துட்டு போகட்டும். அவ வெனகாரப் புள்ளதான்டி.
■■■■■■■■■■■■■■■■■■■◆■■■■■■■■
Vinaya = good manners, polite, modesty.
●●●●●●●●●●●●●●●●●●●●●

எழுதியவர் : மலர் (30-Dec-18, 8:06 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 35

மேலே