சிந்தனை வாசலில் வந்து சிவந்த ரோஜாவாய்ச் சிரிப்பவளே
சிந்தனை வாசலில் வந்து சிவந்த ரோஜாவாய்ச் சிரிப்பவளே
புத்தனின் பாதையில் போனவனை புன்னகையின் திசையில் திருப்பியவளே
அந்தியில் காத்திருக்க செய்து வராமல் அன்றாடம் என்னை ஏமாற்றுபவளே
புன்னகையை புத்தகமாக்கி புதிய அர்த்தங்கள் சொல்லும் பொதிகைத் தமிழே
மாறுதலாக மார்கழிக் காலையில் வாராயோ தரிசிக்க காத்திருக்கிறேன் !