பேய் வீடும் ஆதரவற்றவனும்
மேகங்கள் ஆகாயத்தில் விளையாடிக்கொண்டிருந்தது அண்ணார்ந்து பார்த்து ஒரு கதை சொல்லுகின்றான் மழையாய் பேயப்போகும் முகில்கள் கூட எவ்வளவு சந்தோசமாக இருக்கு மனிதனாக பிறந்த நாம் இப்படி வேதனையோடும் வஞ்சனையோடும் அலைகின்றோம் என்று மனதுக்குள் அவனுக்கு கூறிகொள்ளுகின்றான்.
உடம்பு உணரும் அளவுக்கு ஒரு சிறுதுளி நீர் உடலில் பட்டுத்தெறிக்கின்றது அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்த நீர்த்துளி பெரும் இரைச்சலுடன் திடுதிடுவென வாரி இறைக்கின்றது மரத்தின் கீழ் ஓடிப்போய் நின்ற அழகனுக்கு இரவைக்கு எங்க தங்கல் போடுவது என்றே யோசனை போனது மழைமெதுவாக தூறிக்கொண்டேயிருந்தது அப்போது தூரத்தில் ஓர் வெளிச்சம் கண்ணில் பட்டது இவன் அதை நோக்கி பதம் பதிக்கலானான்
இந்த வானம் நல்லாத்தானே இருந்தது இந்த வானத்தையும் நம்ப முடியவில்லை காலத்தையும் நம்ப முடியல என்று தன்னுடனே பேசிச் செல்கின்றான்
அடிக்கடி மின் வெட்டிய வெளிச்சத்திலே இவனால் வழிமாறாமல் நடக்கமுடிந்தது பெரிதாக மின்னலுடன் ஒரு முழக்கம் அந்த ஒளி அவனுக்கு இரவுப்படுக்கைக்கு இடம் காட்டியது என்ன பெரிய வீடு பிறந்த இந்த அரண்மனைக்கு சொந்தமானவனாக பிறக்கவேண்டும் என்று எண்ணிய படி வீட்டின் இறவாணத்துக்கு செல்ல காலிலே ஒரு தகரம் பெரும் சத்தத்தை எழுப்பியது தட்டித் தடவி போய் அந்த இருட்டுக்குள் கடமைக்காக கொஞ்சம் சுத்தம் செய்கின்றான் தலையில் மொக்காடு போட்டிருந்த துண்டை எடுத்து விரித்து உறங்குகின்றான் அப்போது திடீரென சில சத்தங்கள் வீட்டின் அறைகளுக்குள் கேட்டுகொண்டே இருந்தது எலிகளின் விளையாட்டுப் போல எண்ணி அசந்து தூங்கினான்
பறவைகளின் கீச்சலுடன் இவனுடைய விழிகளும் விரித்துப் பார்க்கின்றது அவன் படுத்த இடத்தில் நாய் கூட ஒதுங்கி நிற்காது அப்படி அருவருப்பான இடம் இந்த வீட்டில் யாரும் இல்லை போல என உள்ள போய் பார்த்தான் பல வருடங்கள் சன நடமாட்டமே இல்லாத வீடு தான் இது இருந்தாலும் இந்த அகதிக்கு இந்த சகதி நிறைந்த வீடு அடைக்கலம் கொடுத்திருக்கு என்று சந்தோசப்படுகின்றான் கொஞ்ச நாள் இந்த வீட்டிலேயே படுக்கையை போடலாம் போல என்று எண்ணியே துப்பரவு செய்யலாம் என்று வலக்கை பக்கம் பார்க்கின்றான் வணக்கம் சொல்லி வரவழைப்பது போல ஒரு அழகிய ஓவியம்
கால் புதையும் அளவுக்கு குப்பை கூழங்கள் இது ஒரு பேய்வீடு போலவே இருக்கே என்று எண்ணிய படியே வேலையைச்செய்கின்றான் தொண்டை வறண்டு தண்ணீர்த்தாகம் எடுத்தது எங்கே தண்ணீர் இருக்கும் என்று வெளியே போனான் ஒரு கிணறு இருந்தது அதை எட்டிப்பார்த்த போது துர் நாற்றம் வீசியது நேற்று இரவு பெய்த மழையில் சிரட்டை ஒன்றில் நிரம்பிய நீரினை பருகி தாகம் தீர்க்கின்றான் சிறிது நேரம் வரை துப்பரவு பணியை செய்து விட்டு அங்கே சில அறைகள் பூட்டியே கிடந்தது யன்னல் ஓரத்தால் பார்க்கின்றான் பல புத்தங்கள் கிடந்தன அவைகள் மந்திர புத்தங்கள் போல என எண்ணி முடிந்த வரை அதனை எடுக்க முயற்சி செய்கின்றான் ஒரு புத்தகம் கையிலே பட்டது அதிலே இப்படி எழுதபட்டிருந்தது இதை புரட்டி படிப்பவர்கள் பார்வையற்று அலைவாரென திடீரென கீழே போட்டுவிடுகின்றான் நமக்கு ஏன் இந்த வீண் வேலை பசிக்குது முதல் எது தின்போம் என்று துண்டை எடுத்து வெளியில் செல்லுகின்றான்
மாடுகள் நடந்த அரவத்தினாலே பயணிக்கின்றான் இரண்டு மயில் தூரம் நடந்ததும் ஒரு குடிசை ஒன்று இருந்தது அங்கே ஆள் நடமாட்டம் தென்பட்டது அங்கே அம்மா...... அம்மா..... என்று கூப்பிட்டான் அங்கு முதிர்ந்த பாட்டியும் ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணும் இருந்தார்கள்
இங்கு எங்கேயும் தேத்தண்ணி கடை இருக்குமா மூத்தம்மா என கேட்டன் அந்த ஆலமரத்து சந்தியில இருக்கும் போய்ப்பார் மனே என்றார்
அவ சொன்னமாதிரி இருந்தது தேத்தண்ணி கடை அங்கே ஒரு தேநீரும் சீனி தூவிய கடிப்பானும் வாங்கி தின்று பீடி ஒரு கட்டும் கேட்கின்றான் அவர் கொடுக்க காசைக்கொடுத்து மிச்சக்காசை வாங்கிப்பொத்திக்கொண்டு வந்த இடத்தாலே செல்லுகின்றான்
அவனை போகவிட்டு கடையில் இருந்தவர்கள் இவன் புதுசாக்கிடக்கே யார் என்று அவர்களுக்குள்ளே விசாரிக்கின்றார்கள்
அந்த கிழவியின் வீட்டை அடைகின்றான் கிழவியின் நடுக்கமான குரலால் நீ எங்கமகனே போகணும் உன்னை இதுக்கு முதல் காணலையே என கேட்கின்றார் உண்மையை சொன்னால் வீட்டின் உரிமையாளரிடம் சொல்லி என்டா தங்களை தடுத்து விடும் கிழவி என்று கதையை மாற்றி விடுகின்றான்
பாட்டி அந்தா தெரியிர பெரிய வீடு யாரின்ட பாட்டி அது? பேய் வீடு மகனே அங்கால போயிடாத திரும்ப வரமாட்டாய் இவனுக்கு கொஞ்சம் பயம் கொடுத்தது என்ன சொல்லுறா பாட்டி எனக் கேட்டான் அது ஒரு பெரிய கதைடா மகனே ஆர்வமாக கேட்கின்றான்
அந்தகாலத்தில அந்த வீட்டுப்போடியாரு ஊருக்கெல்லாம் உணவு கொடுப்பாரு செல்வமாய் செழிச்ச வீடு நான் குமரியாக இருக்கும் போது நானும் போய் சாப்பிட்டு இருக்கேன் ஓகோ என கொடுப்புக்குள் சிரிச்சபடி கிழவியின் மகளை பார்க்கின்றான் அவளுக்கும் கொஞ்சம் சிரிப்பு பாட்டி நீங்க சொல்லுங்கோ பிறகென்னண்டா அந்த சீதேவி மனிசன் இருந்தாப்பில சீவனை விட்டுத்தாரு அதற்கு பிறகு அவரிட பிள்ளைகள் எல்லாத்தையும் விற்றுப்போட்டு ரவுண் பக்கம் போய்த்துகள் அப்படியே இருக்க இன்னொரு போடி வந்திருந்தான் அங்க அவனுக்கு ஒரு வேலைக்காரன் அவன் நல்ல இளம்பொடியன் இருபத்திரெண்டு வயது இருக்கும் நல்ல திடகாத்திரமான ஆள் ஒருநாள் இந்த போடி தேங்காய்களை ஆஞ்சி உரிச்சி பையில கட்டி போடு வாறன் என்று சொல்லிட்டு போயிருக்கான் இந்த புள்ள என்ன செய்ததென்டா எல்லாத் தேங்காய்களையும் ஆய்ந்து போட்டுத்து மறந்தாப்பில படுத்திட்டான் இந்த போடி யாரிட கோபத்தில வந்தானோ தெரியல படுத்துகிடந்த பொடியனுக்கு மாட்டு வண்டிலில கிடந்த பொல்லொன்ற எடுத்து ஆணுடம்பில் அடிச்சி போட்டான் அடியோடு பொடியன் சுருண்டு விழுந்தவன்தான் மகனே செத்துபோயிட்டான் இந்த கள்ளப்போடி உடனே கிடந்த வைக்கோல் கொள்ளி எல்லாம் போட்டு இரவோட இரவா எரிச்சிப்புட்டான் அன்று பஞ்சமி அதனால அங்க யாரும் வந்து நிற்க விடுறதில்லையாம் என்றுசொல்லி முடிக்க அருகில் நின்ற பெண்ணை பார்க்கின்றான் அவள் அழுத படி கண்ணைத்துடைக்கின்றாள் என்ன பாட்டி புள்ளைக்கு கவலை போல ஆமாம் தம்பி அந்த பொடியன்தான் இவளை விரும்பி இருந்தவன் அதோட இவள் கல்யாணமும் கட்டல
சரி பாட்டி இருட்டாகுது நான் பொய்த்து வாறன் என்று நடைய தொடங்கு கின்றான் வீட்டுக்கு அருகில் செல்ல செல்ல பாட்டிட கதையும் அன்று அந்த பொடியன் செத்த நாளும் நினைவுக்கு வரத்தொடங்குது கேட்காமலே விட்டிருக்கலாமோ என்று உள்ளே போனான் பீடிய வாயில் வைத்து மூட்டித்து இருக்க தொப்பென தேங்காய் ஒன்று விழுந்திச்சி எடுத்து உரித்து தேங்காய் துண்டை மென்று கொண்டே படுக்கையை போட்டான் கிழவி சொன்னது போல படுக்க விடலதான் யாரோ வெளியில தண்ணீ அள்ளுவது போலவும் சட்டி பானைகள் கழுவுவது போலவும் ஒரே சத்தம் நேற்றிரவும் சில சத்தம் கேட்டது தான் எலி என்று நினைத்தோமே இது பாட்டி சொன்ன ஆள்தான் போல பயமும் கூதலும்ஒன்றா வந்தது போல நடுங்கிக் கொண்டே இருந்தான் இந்த இருட்டுக்குள்ள போனால் நல்லமில்ல என்று கண்ண மூடித்து படுத்திட்டான் அதுக்கு பிறகு ஒன்றும் இல்லை அவன் நல்ல தூக்கம்
மறுநாள் காலையில் பாட்டியின் குடிசையை நோக்கி செல்லுகின்றான் அன்று அந்த கிழவி இவனை இன்றைக்கு யாரென அறிய வேண்டுமென இருந்தது போல நீ யாரென்று சொல்லு மகனே என்று வினாவுகின்றது
என்ன பாட்டி நான் வரட்டும் விடுவதில்லை என்று இருந்திருக்கா போல தெரியுது தெரியத்தானே வேணும் மகன் ஓம் கா நான் முல்லைத்தீவு கடந்த யுத்தத்தில எனது குடும்பம் எல்லாம் அழிஞ்சிட்டுது எனக்கும் உடம்பெல்லாம் காயம் நான் இங்கால கோயில்கள் நடந்தா வாறது வயிறார உண்டு வாழ்வை கழிக்கின்றேன் கா மெய்தானா மகனே
அந்த பொண்ணு பால் கொண்டு கொடுக்கின்றாள் நீ ஏன்டா புள்ளையா எங்கட வாயல செய்திட்டு இருண்டா மகனே என்ருசொல்லுற அந்த கிழவி சிரிச்சிட்டே எலும்புகின்றான் அந்த மனிசன் .