சண்ணுமுக்கா

சண்ணுமுக்கா?
■■■■■■■■■■■■■■■■
ஏன்டப்பா சண்முகம், வடக்க போனவன் எப்படா ஊருக்கு வந்த? பரவால்லயே இந்தப் பெரிய பாட்டியை நீ மறக்காம இருக்கிறயே!
@@@@
அந்த மாதிரியெல்லாம் சொல்லாதீங்க பாட்டி. நான் வந்து ரண்டு நாளு ஆகுது. ஒடம்புக்கு சரியில்லை. இன்னிக்குத்தான் சுமாரா இருக்குது. அதான் உங்களப் பாக்கவந்தேன்.
@@@@
ஆமாம் வடக்க போயிட்டு வர்றவங்கள் எல்லாம் அவுங்க பேர மாத்திட்டு வர்றாங்களே நீ என்னடா சாமி சொல்லற?
@@@@@@
நானும் பத்தோட பதினொண்ணுதான் பாட்டி. நம்ம தமிழ்க் கடவுள் முருகன். தமிழர்கள் தவிர திருமுருகன் கடவுள கேரளத்தில ஒரு 20% , கர்நாடகம் 5%
தெலுங்கானாவில 5% ஆந்திரப் பிரதேசத்தில 5% மக்களுக்குக்கூட நம்ம முருகக் கடவுளத் தெரியாது. முருகன்ங்கிற பேரே அவுங்களுக்குத் தெரியாது. முருகடவுளை சண்முகம், தண்டாயுபாணின்னு தமிழ் நாட்டில சொல்லறாங்க. இரண்டுமே தமிழ்ப் பேருங்க இல்ல. ஆனா ஷண்முக் இந்தில முருகரைக் குறிக்கும் சொல் உள்ளது.
@@##
அது சரி..உம் பேர எப்படி மாத்தின?
@@@
இந்திக்காரங்களுக்கு முருகன்ங்கிற பேரை உச்சரிக்க முடியாது. சண்முகமும் அவங்க உச்சரிப்பல அடஙாகாது. என்னை எங்கூட வேலை பாக்கறவங்க எல்லாம் எம் பேர 'ஷண்முக்'குன்னு தான் கூப்படறாங்க. நானும் எம்பேர 'ஷன்முக்'ன்னு மாத்திட்டேன் பாட்டி.
@@@@
அட பாவி, சண்ணுமுக்கா. என்ன அநியாம்டா இது.
#@##
காலம், இடம் பொருள் ஏவலுக்கு ஏத்த கோலம் போட்டத்தான் நம்மகிட்ட மத்வதங்க நல்லா பழகுவாங்க.
@@@@
சரிடப்பா சண்ணுமுக்கா
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Shanmuk

எழுதியவர் : மலர் (3-Jan-19, 12:26 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 79

மேலே