காதல் பறவைகள்

ராமுவும் சோமுவும் கிளி ஜோதிடர்கள். இந்த கிளி, ஜோதிடம் எல்லாம் பார்த்தீர்களென்றால், அவையாவும் பிரசன்ன மார்க்கத்தில் வரக்கூடியதுதான். கிளி ஒரு முருகன் சீட்டை எடுக்கிறது என்றால், அதற்கு ஒரு தனி பாடல் எழுதப்பட்டிருக்கும் . கிளி ஒரு அட்டையை எடுக்கும், அந்த அட்டையில் ஒரு படம் இருக்கும். அட்டைக்கு எண் இருக்கும். அந்த எண்ணிற்கு ஒரு பாடல் எழுதி இருக்கும் . பாடலின் அர்த்தமே ஜோதிடம்
இந்த எண்ணிற்கு, இந்த உருவம் வந்தால், அந்த உருவத்திற்கு ஏற்றப் பலன்கள் நடக்கும்.

உக்கிரமாக காளி, துர்க்கை அப்படியெல்லாம் வந்தால் உங்கள் குடும்பத்தில் ஏதோ கெட்டது நடக்கப் போகிறது. நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அதில் வரும். ராமர் தனியாக வருகிறார் என்றால், கணவன், மனைவி பிரிகிற மாதிரி இருக்கும் என்று சொல்வார்கள். அவரே பட்டாபிஷேகத்துடன் படம் வந்தால், ஏழெட்டு வருடமாக கஷ்டப்பட்டீர்கள், இனிமேல் உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது, பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள் என்கிற மாதிரி பலன் சொல்வார்கள்.

இதெல்லாமே கிரக நிலைகளின் இயக்கங்களே என்று சொல்லலாம். கிளி ஒரு ஜீவ ராசி, அது ஏதாவது ஒரு சீட்டை தெரிந்து எடுக்கிறது.. அதை வந்து சுக்ரனோ, சூரியனோ இயக்கலாம். கிரகங்களுடைய தூண்டுதலில் அது சீட்டை எடுக்கலாம். அந்த சீட்டிற்குரிய விவரம் அவருடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் பின்னிப் பிணைந்ததாக இருக்கும். சீட்டுக்கும், அவருடைய வாழ்க்கைக்கும் ஒரு பின்னணி, பிணைப்பு இருக்கும். அதைத்தான் அது குறிக்கிறது என்பான் ஜோதிடன். அவன் தன் பேச்சின் மூலம் ஜோதிடம் பார்க்க வந்தவரை நம்ப வைத்து விடுவான்.
****
அருளுரை

ராமுக்கும் சோமுவுக்கும் இடையே ஜோதிடம் சொல்வதில் பலத்த போட்டி யாருடைய கிளி சொல்லும் ஜோதிடம் சரி யாருக்கு அதிக வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்பது தான அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனை. இருவரும் நண்பர்கள். போட்டி இருந்தாலும் ஊர் சந்தையில் அருகருகே இருந்து ஜோதிடம் சொல்வார்கள்
ராமுவின் ஆண் கிளிக்கு பெயர் ராஜா. அது ஒரு பச்சை நிறக் கிளி. அதுக்கு கிளி ஜோதிடம் ராமு கற்று கொடுத்தான். சோமுவின் பெண் கிளி பெயர் ராணி . அதன் கழுத்தில் சிவப்பு வலைம் உடல் முழுவதும் பச்சை நிறம். அதன் அழகில் ராஜா கவரப்ப்டான். ராணி தன் எஜமான்சொற்படி நடக்கும் . தான் செய்யும் வேலையில் கவனம். ராணியால் சோமுவுக்கு அதிக வாடிக்கையாளர்கள் வந்தார்கள் பக்கத்து கிராமங்ககளில் இருந்தும் வந்தார்கள் .

கிளிகளில் சுமார் 86 இனங்கள் உண்டு. அவை வளைந்த வலுவான அலகினை உடையவை கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள். கிளிகள் மிகவும் புத்திசாலி பறவைகள். இவற்றிற்கு கேட்கும் சக்தி அதிகம், எஜமான் சொன்னதை செய்தபின் கிளி தானியத்தை பரிசசாக எதிர் பார்க்கும்
...
வாடிகையாளர் ஒருவன் சொன்னான் ” மச்சான் நான் எத்தனயோ கிளி ஜோதிடர்களிடம் போய் ஜோதிடம் பார்திருக்கிறேன், சோமுவிடம் கிளி ஜோதிடம் நான் கேட்டு அவனின் கிளி சொன்னது எல்லாம் எனக்கு சரியாக வந்திருக்கு. அவனின் கிளிக்கு எதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கு. பல தடவை யோசித்து பிறகு வந்த வாடிக்கையாளரின் முகத்தை பார்த்து கீச்கிட்டு விட்டு சீட்டை எடித்து சொமுவிடம் கொடுக்கும்.
நான் ராமுவிடம் போன போது அவனின் கிளி பல தடவை ராமு ராஜா வந்து சீட்டை எடுத்துக் கொடு என்று அவன் கூப்பிட்டபின் தயங்கி தயங்கி வந்து சீட்டு ஒன்றை தூக்கும் பின் அதை திருப்பி வைத்து விடும். பின் இன்னொரு சீட்டை தூக்கும . அதுக்கு தான் எந்த சீட்டை எடுக்க வேண்டும் என்று தெரியாது. அது எடுத்துத் தந்த சீட்டின் படி எனக்கு நடக்கவில்லை “
இப்படி ராமுவின் கிளி ஜோதிடத்துக்கு பல எதிர் மறை விமர்சனங்கள் வந்தான . அவனிடம் வாடிகையாள்ர்கள் போவது குறைவு. அவனுக்கு தன் கிளி ராஜா மேல் கோபம் தான் சொல்வதை கவனித்துக் கேட்பதில்லை. அதிர்ஷ்டம் கேட்ட கிளி என்று .
ராஜாவின் கவனம் சோமுவின் கிளி ராணி மேல். காரணம் ராஜாவுக்கு ராணி மேல் காதல். ராணி கோட்டில் இருந்து வெளியே வந்து சீட்டை எடுக்கும் போது அதன் அழகை பார்த்து ரசித்தபடி இருபதால் ராமு சொல்வது அதுக்குக் கேளாது . அதோடு சந்தர்ப்பம் கிடைத்தால் எஜமானின் கரைச்சலில் இருந்து கூட்டில் இருந்து தப்பி பறந்து போய் விடுவோமா என்று கூட சில சமயம் ராஜா யோசித்தது .

அது எதிர்பார்த்த வாறு ஒரு நாள் கூட்டில் இருந்து தப்பி பறக்க சந்தர்ப்பம் அதுக்குக் கிடைத்தது ஒரு நாள் ராமு கூட்டை திறந்து “வாடா ராஜா வாடா இவருக்கு ஒரு சீட்டை எடுத்து தாடா” என்று சொன்னபோது வெளியே வந்த கிளி சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சீட்டை எடுக்காமல் பறந்து போயிற்று. அதை பார்த்த சோமுவின் கிளி ராணியும் செய்தது .
இரணடு கிளிகளும் ஒரு மரத்தில் போய் அமர்ந்தன. தங்கள் காதலை தொடர்ந்தன . கொஞ்சின . ஒன்றின் தலையில் மற்றது பேன் பார்த்து. தங்கள் ஆலககினால் முத்தமிட்டன மற்றைய கிளிகள் ராஜா ராணி காதல் ஜோடியைப் பார்த்து எரிச்சல் பட்டன. பாவம் ஆவை இரண்டும் சுதந்திரமாக வெகு காலம் வாழமுடியவில்லை.

கிளி பிடித்து விற்கும் ஒருவன் வலை வீசி ராஜாவையும் ராணியையும் சிறை பிடித்தான் . இரு நாட்களில் திரும்பவும் கூட்டுக்குள் ராஜாவும் ராணியும் கடை ஒன்றில் சிறை வாசம் அனுபவித்தனர் . அவர்கள் காதல் கூட்டில் தொடர்ந்தது . சில நாட்களில் பல வித பறவைகள், நாய் குட்டிகள் , மீன்கள் பூனைகள் விற்கும் கடை சொந்தக்காரன் பஞ்சவர்ணக் கிளி ஒன்றை வாங்கி வந்து, ராஜா ராணி இருந்த கூட்டுக்குள் அவர்களோடு ஒரே கூட்டில் விட்டான் பஞ்சவர்ணக் கிளிக்கு அவன் மங்கை என்று பெயர் வைத்தான் . மங்கையின் பஞ்சவ்ரணத்தை கண்டு அதன் அழகில் மயங்கி, தன் காதலை ராஜா ராணியில் இருந்து மங்கைக்கு மாற்றினான் அது ராணிக்கு பிடிக்கவில்லை “ராஜா அழகுக்கு தான் என்னை விரும்பினானா?. என்னிலும் பார்க்க ஒரு அழகியைக் கண்டவுடன் தன் காதலை மாற்றி விட்டானே”? .

ஓரு நாள் ஒரு குடும்பம் தங்களின் மகன் ரமேசுடன் கிளிகள் விற்கும் கடைக்கு வந்தார்கள் . அவர்களின் ஒரே மகன் ரமேசுக்கு ராஜாவையும் மங்கையையும் பிடித்து கொண்டது . அவன் விரும்பி அவை இரண்டையும் தனக்கு வாங்கித் தரும் படி கேட்டான் ராஜாவையும் மங்கையையும் அந்த குடும்பம் விலை கொடுத்து வாங்கி மகனுக்கு கொடுத்தது .
ராணி ராஜாவை பிரிந்த சோகத்தில் சில நாட்களில் இறந்து போயிற்று
ராஜாவும் மங்கையும் காதலராக ரமேஷின் வீட்டில் கூட்டில் வாழந்தனர் அவர்கள் இருந்த வீட்டில் ஒரு கறுவல் பூனை இருந்தது . அந்த பொல்லாத பூனை சுந்திரமாக வீட்டில் திரிந்தது .. அதுக்கு இரண்டு கிளிகள் மேலும் ஒரு கண்
’ஓரு நாள் வீட்டு பையன் ரமேஷ் கவனக்குறைவால் கிளிகள் இருந்த கூட்டை மூடவில்லை . சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த கறுவல் கூட்டை திறந்து மங்கையை தன் வாயில் கவ்விக் கொண்டு தொடதுகு ஓடியது . மங்கையால் கறுவளின் பிடியில் தப்பக்க முடியவில்லை . ராஜா உதவி கேட்டுகீச்சிட்டு கத்தியது .. பஞ்சவர்ணக் கிளி மங்கையும் கத்தி பயனிலை. காப்பாற்ற வீட்டில் ஒருவரும் இல்லை. அது போதும் அந்த பூனைக்கு. அது மங்கையை கடித்து ரசித்து உண்டது மாங்கையின் உயிர் பிரிந்தது.
ரமேஷ் தான் செய்த தவறை உணர்ந்து கறுவலை வீட்டை விட்டு துரத்தி விட்டான். மங்கையை பிரிந்த சோகத்தில் ராஜா இருப்பதை இருப்பதைக் கண்ட ரமேஷ் மிக அழகிய வெள்ளை நிற கக்கடு இந்தோனேசியன் கிளியை வாங்கி வந்தான். அதன் அழகோ அழகு . தலையில் விசிறி போல் ஒரு பூ. தன் அழகின் மீது அதுக்கு தனிக் கர்வம். அதனால் முதலில் ராஜாவை உதாசீனம் செய்தது. இறுதியில் தனக்கு பேச ஒருவரும் இல்லாததால் ராஜாவோடு பேசத் தொடங்கியது. ராஜா கக்கடுவின் தலையை வருடி விட்டது இரண்டும் சேர்ந்து தண்ணீர் குடித்தன தானியம் கொரித்தன. கொஞ்சின .அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. கக்கடு ராஜாவின் மூன்றாவது காதலியானாள் . கொடுத்து வைத்தவன் ராஜா. காதல் மன்னன் ஆனான் ராஜா .
****
பின்னுரை
(இது என் கற்பனையில் திடீர் எனத் தோன்றிய சற்று வித்தியாசமான கதை . இதை மனித வாழ்வோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எத்தனை ஆண்கள் வண்ணத்துப் பூச்சி போல் வாழ்கிறார்கள என்று. அப்போது கதையின் அர்த்தம் புரியும் )

(யாவும் புனைவு ).

எழுதியவர் : Pon Kulendiren (2-Jan-19, 6:36 am)
Tanglish : kaadhal paravaikal
பார்வை : 536

மேலே