அன்பை விதையிடு

உள்ளத்தை உறுதி படுத்திடு /
உடலை வலுப்படுத்திடு /
ஊட்டச் சத்து உணவை உண்டிடு /
ஊக்கமுடன் நடை போட்டிடு /

உளியாக இருந்திடு /
வாழ்வை அழகாச் செதுக்கிடு/
நீர் ஊறும் ஊற்றாக இருந்திடு /
சிந்தனையை ஊற்றுப் போல் பெருக்கிடு /

அம்பு தொடுத்திடு /
அதற்கு முன் குறி வைத்திடு /
அலையும் புத்தியைத் தடுத்திடு/
தலையை எய்து வீழ்த்திடு/

ஆற்றலை வளப்படுத்திடு
ஆதவனாக மாறிடு/
உலகெங்கும் புகழ் ஒளி பரப்பிடு /
வறுமை இருள் சூழாமல் வாழ்ந்திடு /

தொல்லைகளை முறியடித்திடு /
எல்லைகளைக் கடந்திடு /
வெல்வோம் என்று உரைத்திடு/
வென்று பிறருக்குக் காட்டிடு/

கொடிய எண்ணத்தை ஒடிக்கிடு/
அதைக் கொன்று புதைத்திடு /
அன்பை விதையிட்டிடு/
பாச மலர்களைப் பறித்திடு/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (5-Jan-19, 10:54 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 150

மேலே