ஒரு வித சப்த்தம்

ஒரு வித சப்த்தம்
தென்றல் ஒலியா
இல்லையே

வியர்வை அர்ப்பறித்து
கொட்டுகிறதே

வெள்ளப்பெருக்கின்
சப்த்தமா
ஆறுகளே இல்லையே....?

ஆறு தலைகீழாய் விழுந்து
ஒன்பது ஆன கதையாய்
ஆகிவிட்டதே

அவளை பார்த்த சில நொடியில்

நட்சத்திரங்களை
அரைத்து செய்த உருவம்
போலும்

நடந்து
பல கோடி பேரை கடந்து
தெருக்கோடியில் இருக்கும் என்னிடம்
வந்து கேட்கிறாள்

காதல் என்றால் என்ன ....?

என்னை காதலித்து பார் என்றேன் ..

பாசம் என்றால் என்ன ....?

என்னை நேசித்து பார் என்றேன் ...

காமம் என்றால் என்ன ...?

என்னை திருமணம் செய்து பார் என்றேன் ...

என்னை தவிர வேறுபெண்கள் இல்லையோ ...?

வரும் வழியில் வேறு ஆண்களை பாக்களையோ

நீ வாழ வந்தவளா
வாதம் செய்ய வந்தவளா

வளராத இதயம் கொண்டவளே
பருவம் மட்டும் அடைந்தவளே
நீ பக்குவம் பெற வேண்டும்

காதல் கதை அல்ல
சொல்லி புரியவைக்க
அது கரு சுமந்தாக வேண்டும்

பாசம் அது சுவாசம் போல
மரங்களை நட்டு பாதுகாப்பது போல
செய்யவேண்டும்

காமம் ஒரு போர் போல
நீ போரிட வேண்டும்

இங்கே விடியலுக்கே
விதிமுறை உள்ளது
பெண்ணே உனக்கும்
எனக்கும் இருக்காதா

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (5-Jan-19, 3:06 pm)
சேர்த்தது : panneer karky
பார்வை : 407

மேலே