முதலையும் குரங்கும் சிறுகதை

ஒரு மிகப் பெரிய குளத்தின் அருகே பசுமையான மரங்கள்
அம்மரங்களிலே குரங்குகள் பாய்ந்து பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்தன .
ஒவ்வொரு நாளும் குரங்குகள் விளையாடுவதை
குளத்தில் உள்ள பெரிய முதலை ஓன்று பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கும் ,
ஒருநாள் அம்முதலைக்கு விபரீதமான ஆசை ஏற்பட்டது,
அங்கு விளையாடும் பெரிய குரங்கு ஒன்றை பிடித்து விழுங்கி விட எண்ணியது
கரையிலும் மரத்திலும் தாவி விளையாடும் குரங்கைப் பார்த்து
முதலை சொன்னது ,
இந்த நாவல் மரத்தில் உள்ள கனிகளை எனக்கும் கொஞ்சம் போடு நானும் சாப்பிட்டு பார்க்கிறேன் என்றது
, குரங்கும் நல்ல நல்ல நாவற்பழங்களை பறித்துப் போட்டது,
முதலையும் அதை ருசித்து ரசித்து உண்டு மகிழ்ந்தது ,
மறுநாள் முதலைக்கு இருப்புக் கொள்ளவில்லை, நன்றாக யோசித்து விட்டு
எவ்வளவு ருசி மிக்க பழங்கள் இவை, இதை உண்டு வாழும் இந்த குரங்கின் ஈரல் எவ்வளவு சுவை உள்ளதாய் இருக்கும் , ஆகையால் அந்தக் குரங்கை தந்திரமாய் பிடித்து சாப்பிட்டு விட வேண்டும் என ஆசை கொண்டது .
மறுநாள் படு குஷியாக கரைக்கு சென்றது முதலை
அந்தக் குரங்கைப் பார்த்த முதலை
நண்பா/நீ என் முதுகில் ஏறி அமர்ந்து கொள் ,நான் உன்னை சுமந்து சென்று
அக்கரை வரை கொண்டு சென்று காட்டுகிறேன், பயப்படாதே, என்னைக் கெட்டியாக பிடித்துக் கொள் என்றது , குரங்கும் முதலையின் சொல்லை நம்பி அதன் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டது
பாதி தூரம் குளத்தில் சென்றதும் முதலை தன் புத்தியைக் காட்ட எண்ணி
நண்பா இவ்வளவு ருசி மிக்க நாவல் பழங்களை
நிதமும் உண்ணும் உனது ஈரல் எவ்வளவு சுவை மிகுந்ததாய் இருக்கும்,
அதனால் தான் என் மனைவி உனது ஈரல் வேண்டும் என்று கேட்டாள்
அதற்காகத்தான் உன்னை சுமந்து செல்கிறேன் என்றது.
குரங்குக்கு பயம் வந்து விட்டது , புத்திசாலித் தனமாக
யோசித்து பதில் சொன்னது ,
நண்பனே இதை நான் மரத்தில் இருக்கும் போது சொல்லி இருக்கக் கூடாதா /
என் ஈரலை மரத்தில் அல்லவா விட்டு விட்டு வந்து இருக்கிறேன்.
அப்படி என்றால் நீ ஓன்று செய் என்னை ஏற்றிய இடத்தில் மீண்டும் கொண்டு போய் இறக்கி விடு
நான் ஓடிப் போய் என் ஈரலை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்றது,
முட்டாள் முதலையும் குரங்கின் சொல்லை நம்பி மீண்டும் குரங்கைக் கரையில் இறக்கி விட்டது,
குரங்கு தப்பினேன் பிழைத்தேன் என்று மரத்தில் தாவி ஏறிக் கொண்டது .
பின்பு குரங்கு முதலையைப் பார்த்து ஏ/ முட்டாள் முதலையே ஒரு மனிதனின் உடம்பை விட்டு எப்படி ஈரல் மரத்தில் இருக்கும்./
நம்பிய என்னை ஏமாற்ற நினைத்தாய் , நீ ஏமாந்து விட்டாய் சீ போ என்றது குரங்கு

எழுதியவர் : பாத்திமாமலர் (5-Jan-19, 4:56 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 408

மேலே