மைல்கல்

அவன் உட்கார்த்திருந்த இருக்கையின் பக்கவாட்டில் விஜய் அமர்ந்திருந்தான். அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் பின்வரிசையில் அவள் அமர்ந்திருந்தாள். குளிருக்கு ஏற்ப உடை அணிந்திருந்தாள்.

ஜி ட்ரிப் முடியபோது இன்னும் பேசவே இல்லையே, ஒரு ஹெல்பும் பண்ணமாட்ரீன்களே என்றாள்.

வைட்பன்னு ஜெஸ்ஸி என்ற ராம்ஜி, அக்பர் எதுனா பண்ணுடா என்றார். அக்பர் விஜயிடம் ஏதோ காதில் கிசுகிசுக்க விஜய் எழுந்து முன்னே சென்றான். அவனின் பக்கவாட்டு இருக்கை காலியாகியது. முன்னிருக்கையின் மேல்புறம் இருந்த கம்பியின் மீது முகத்தை முண்டு கொடுத்து கண்களை மூடிக்கொண்டிருந்த அவன் வேர்வையும் வாசனை திரவியமும் கலந்த ஒரு பெண்ணின் வாசனையை உணர்ந்து பக்கவாட்டில் திரும்ப அவள் அமர்ந்தபடி ஹை என்றாள்.

ஹை ஜெஸ்ஸி என்றான். நைஸ் வெதர் நோ என்றாள். எஸ், என்று கூறிவிட்டு அவள் கண்களை கண்டான். அவள் வேறு ஒரு உலகத்தில் மிதந்து கொண்டிருப்பதாய் அவனுக்கு தோன்றியது. சதுரமும் வட்டமும் கலந்த முகம், அகன்று விரிந்த கண்கள். மென்மையான கோதுமை நிற தோல். பிரவுன் நிற அடர்ந்த கேசம். அந்த அதிகாலையிலும் மெலிதான உதட்டு சாயம் பூசியிருந்தாள். அவன் தன்னை பார்க்கிறான் என்று உணர்ந்தவுடன் மெலிதாய் சிரித்தாள். அவளின் முகமும் கண்களும் மலர்வதைக்கண்டவுடன் அருண் தன் முகத்தை திருப்பி சாளரத்தின் ஊடே பார்வையை செலுத்தினான். அடர்ந்த பனிபொழிவில் சிக்கி வெளியில் வரமுடியாமல் விடியல் தவித்து கொண்டிருப்பதாய் அவனுக்கு தோன்றியது. பெரும்பாலான சமயங்களில் ஜெஸ்ஸியின் முகப்பொலிவில் மாட்டிக்கொண்டு அவன் தவிப்பதை போன்றே அது இருந்தது.

“எவரும் சொல்லலாமலே பூக்களும் வாசம் வீசுது, உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது” என்ற இளையராஜாவின் பாடலை தங்கள் இருவருக்கும் கேட்கும் வகையில் மெதுவாக பாடினாள். அந்த இனிமையான குரல் அவனுள் சென்று ஒருவித சிலிர்ப்பை உண்டாக்கியது. அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடவேண்டும் என்று நினைத்தவாறு திரும்பினான் .

ஐ ஹெர்ட் தட் யு வில் சிங் வெல், என்று அவனை பார்த்து புன்னகை பூத்தாள். அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ஜெஸ்ஸி. டேபினெட்லி நாட் லைக் யு. யு ஆர் ரியலி சிங்கிங் வெல் என்றான். மீண்டும் அவளின் பொலிவில் சிக்கியதாக உணர்ந்து போது, அதில் இருந்து வெளிப்பட எண்ணி எழுந்தான்.

வாட் அப்பெண்டு , அம் ஐ டிஸ்டுர்பிங் யு என்றவாறே நகர்ந்து அவனுக்கு வழி விட ஏதுவானாள். சே சே அபசலூட்டலி நாட் , ஜஸ்ட் டாட் ஆஃ வாக்கிங் என்றான்.

பின்னே அமர்ந்திருந்த ராம்ஜியும், அக்பரும் ஜெஸ்ஸி உனக்கும் வாக்கிங்னா பிடிக்குமில்ல என்று கேலி செய்தார்கள். அவர்களை பார்த்து ஜி என்று மெலிதாய் சிணுங்கிவிட்ட, கேன் ஐ ஆல்சோ ஜாயின் வித் யு என்று அருணை பார்த்தாள்.

அருணும் வேறு வழியின்றி சூர் என்றவாறு நகர்ந்து செல்ல, குதூகலித்து துள்ளி, ராம்ஜியையும் அக்பரையும் பார்த்து கை அசைத்தவாறே அவன் பின் சென்றாள்.

பேருந்தைவிட வெளியில் குளிர் அதிகமா இருந்தது. எங்கோ யேசுதாஸின் குரல் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது. அருண் தன் கைகளை ஜாக்கெட்டினுள் விட்டு நடக்கத் துவங்கினான் பின்னே ஓடி வந்த ஜெஸ்ஸி அவனோடு சேர்ந்து கொண்டாள். குளிரின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவள் அவளை உரசியபடி நடக்கத் தொடங்கினாள்

அவர்களோடு இணைந்து அமைதியும் நடந்தது. அமைதியை கலைக்க விரும்பிய அருண், ஜெஸ்ஸி ஏதாவது பேசு என்றான். மீண்டும் அவள் அவனைப் பார்த்து புன்னகை செய்தாள்.

திஸ் ஷர்ட் இஸ் வெரி நைஸ். யு லுக் சோ குட் என்றாள்.

அவளைப் பார்த்து மெதுவாக சிரித்துவிட்டு, என்ன பத்தி இல்ல உன்ன பத்தி ஏதாவது சொல்லு. நீ எங்க படிச்ச, அப்புறம் உன் ஃபேமிலி பத்தி ஏதாவது சொல்லு என்றான்.

உண்மையாவே என்ன பத்தி ஒன்னும் தெரியாதா உங்களுக்கு? என்று சிறிது ஏக்கத்துடன் கேட்டாள்.

இல்ல ஜெஸ்ஸி, நீ ஒரு பிரஷர் நல்லா வேலை பாக்குற அப்படினு எனக்கு தெரியும் அவ்வளவுதான் என்றான்.

ஜெஸ்ஸியை ஏமாற்றம் தாக்கியது. சில சமயங்களில் அவன் கண்கள் அவளை தேடி பிடிப்பதுண்டு. தன்னை அவனுக்கு பிடிக்கும் என்றும், தன்னைப்பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பான் என்று எண்ணினாள்.

சட்டென்று அவன் கைகளை பிடித்துக்கொண்டு, என்ன உங்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா? என்று நேரடியா கேட்டாள்.

அருண் அவள் கைகளை விலகிவிட வேண்டும் என்று நினைத்தான் இருப்பினும் சற்று நிதானித்து, உன்னை யாருக்குதான் பிடிக்காது, ரொம்ப அழகா இருக்க, சின்ன பொண்ணா இருக்க, கியூட்டா சிரிக்கிற அண்ட் ஆல்சோ வெறி தாளெண்டெட். எனக்கு மட்டும் இல்ல கண்டிப்பா எல்லோருக்கும் உன்னை பிடிக்கும் என்றான்.

அவளுக்கு சப்பென்று ஆகியது, அவனை பிடித்திருந்த தன் கைகளை தளர்த்திக்கொண்டாள். இருவரும் அமைதியாக நடக்க தொடங்கினார்.

குளிரின் தாக்கம் சற்று அதிகமாகியது. அந்தக் குளிர் உறைந்து போயிருந்த அவளின் நினைவை கலைத்தது. மெதுவாக நடுங்கினாள். அதை கண்ட அருண் தன் ஜாக்கெட்டை கழற்றி அவளுக்கு அணிவித்தான். ஜாக்கெட்டினை இழுத்துப் போர்த்திக்கொண்டு தேங்க்ஸ் என்றாள்.

ஏதாவது ஒரு கவிதை சொல்லுங்க என்றாள். எது மாதிரியான கவிதை என்றான். காதலர்கள் பற்றி என்றாள்.

அருண் அவ்வப்போது கவிதை எழுதுவது உண்டு. அப்படி அவன் எழுதிய சில கவிதைகளை அவள் படித்திருக்கிறாள். அவனைப் பிடிக்கும் என்பதால் என்னவோ அவனுடைய கவிதைகளையும் அவள் ரசித்தாள்.

அவளுக்காக ஒரு கவிதை சொல்ல வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. யோசித்தவாறே நடந்தான்.

விடியாத காலை
விழித்துக்கொண்ட காடு
ஊடுருவும் குளிர்
உறங்கிக் கிடக்கும் சப்தம்
உடல் உரச நடை செல்லும் இருவர்
உள்ளத்தில் விழித்துக்கொண்ட வேட்கை

பற்றிக் கொண்ட காதலை
பதப்படுத்த வேண்டும் அவன்
என்று அவள் நினைக்க

இது காதல் அல்ல , வெறும்
மோகத்தீதான் என்று
எவ்வாறு எடுத்துரைப்பேன்
என்று அவன் நினைக்க

மௌனமாய் தொடர்ந்தது அந்த
நடைபயணம்.

என்று கவிதையை படித்தான். சுணங்கிப்போனாள். சாலையின் ஓரத்தில் விழுந்து கிடந்த பெரிய மரத்தின் மீது சோர்வாக அமர்ந்துகொண்டாள்.

அவனும் அருகே சென்று அமர்ந்தான்.

காதல்னா என்ன ?

இட்ஸ் எ மில்லியன் டாலர் கொஸ்டின். அவ்வளவு ஈஸியானு தெரியல. அப்படினா எல்லாரும் அதுல வெற்றி அடைஞ்சிடுவாங்க. கொஞ்சம் போரின் சுப்ஜெக்ட்ன்னு கூட சொல்லலாம் என்றான்.

ப்ளீஸ் சொல்லுங்க, ஜஸ்ட் பார் அண்டர்ஸ்டாண்டிங். பட் டோன்ட் கன்ப்யூஸ் மீ ஓகே என்றாள்.

ஓகே லெட் மீ ட்ரை, காதல் அப்படிங்கறது ஒரு தொடர்ப்பயணம். அதுல நிறைய மைல்கற்கள் இருக்கு. எல்லவிதமா காதலுக்கும் இது பொருந்தும். ஆண், பெண் காதல், கலை மேல் காதல், கடவுள்மேல் இருக்கிற காதல், வேலை அல்லது தொழில் மேல் இருக்கிற காதல்.

ஒருவிதமான ஈர்ப்புதான் அதோட தொடக்கமா இருக்கும். அதை காதல்னு சொல்லமுடியாது. அந்த ஈர்ப்பு காதல் வளர்வதற்கு உண்டான அடித்தளத்தை போடக்கூடும். அந்த ஈர்ப்பு தொடங்குவதற்கும் வளர்வதுக்குமான காரணங்களோ வரைமுறையோ கிடையாது.

ஆண் பெண் காதல் பொறுத்தவரை அழகு, திறமை போன்றவை சில காரணங்களா இருக்கலாம். அந்த ஈர்ப்பு பலரிடம் வரக்கூடும். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இதை கடந்துதான் செல்கிறார்கள்.

தெருவில் ஒரு அழகான பெண்ணையோ , ஆணையோ காணும்போது ஒருவித ஈர்ப்பு ஏற்படும். கடந்து சென்ற பின்னர் அதை மறந்துவிடுவோம். மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு ஒருவருடன் ஏற்படுகின்றபோது மனம் அந்த ஒருவரை நினைத்து ஏங்க தொடங்குகிறது. ஒரு நிகழ்வு நேரும் தருணத்தைவிட அந்த நிகழ்வை நினைத்து பார்க்கும்போதுதான் அந்த நிகழ்வின் தாக்கம் அதிகரிக்கிறது. அவ்வாறு நினைக்கின்ற போதும், மீண்டும் அந்த நிகழ்வு நிகழ்கின்றபோதும் அதை நாம் காதல் என்று கற்பனை செய்துகொள்கிறோம்.

அந்த நிகழ்வை ஒரு குறிப்பிட்ட காலம் தவிர்த்துவிட்டால், அந்த நினைவிலிருந்து விடுபட்டுவிட்டால் அந்த காதல் எண்ணங்கள் தானாக அழிந்துவிடும்.

அதே ஈர்ப்பு, அதே ஏக்கம் இருவருக்கும் ஏற்படுகின்ற போது அந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். அந்த ஈர்ப்பை பலப்படுத்த தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள், திறமையை வெளிப்படுத்தும் செயல்களை செய்கிறார்கள் . எதனால் மற்றவர் தங்களின்பால் ஈர்க்கப்பட்டனரோ அதை சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். அதிலும் பெண்கள் அதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இதை முதல் மைல்கல் எனலாம். இன்னும் சற்றுகாலம் இது கடந்து செல்கையில் ஒருவிதமான பிடிப்பு இருவருக்கும் வரும். அப்போது ஈர்ப்பு சார்ந்த எதுவும் பெரிதாக தெரியாது. நெடுங்காலம் இவனோடு / இவளோடு சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கை தோன்றும். அதை தாண்டியும் அந்த பயணம் தொடரும். அதுக்கப்புறம் நிறைய இருக்கு.

ப்ளீஸ் ஸ்டாப் பண்ணுங்க, அப்படினா நாம இன்னும் முதல் மைல்கல் தாண்டலா அவ்வளவுதானே என்றாள்.

அப்படினா அந்த நிகழ்வை ரிப்பீட் பண்ணுவோம் என்று மெதுவாக சிரித்தாள்.

நோ உனக்கு என்மேல் ஏற்பட்டுள்ளது வெறும் ஈர்ப்புதான் அதை தாண்டி எதுவுமில்லைனு சொல்லேறேன். யு வில் பைண்ட் சம்ஒன் எல்ஸ். இட்ஸ் நாட் மீ என்றான்.

ப்ளீஸ் என்னோட மூட ஸ்பாயில் பண்ணாதீங்க. காடு அழகா இருக்கு, வெதர் அருமையா இருக்கு. இப்ப உங்க கையை பிடிச்சிக்கிட்டு இன்னும் கொஞ்ச தூரம் நடக்கணும் அவ்வளவுதான் என்றாள். அப்புறமா தொடர்பயணத்தை பார்த்துக்கலாம் என்று கண்களை சிமிட்டி சிரித்தாள்.

ஓகே ஆஸ் யு விஷ் என்று கைகளை நீட்டினான். அவனின் கைகளை பிடித்துக்கொண்டு நடக்கத்தொடங்கினாள். அவளுக்கு ஒருவித நம்பிக்கை பிறந்தது.

எழுதியவர் : Prasanna (5-Jan-19, 7:16 am)
சேர்த்தது : பிரசன்னா
Tanglish : mailkal
பார்வை : 233

மேலே